/indian-express-tamil/media/media_files/pIQBVBgdeKLJj5pnZELN.jpg)
ரஜினிகாந்த் தனது வீட்டில் மனைவி லதா, மகள்கள், பேரப்பிள்ளைகள், குடும்பத்தினருடன் தீபாவளி பண்டிகையை கொண்டாடினார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது வீட்டு முன்பு திரண்டிருந்த ரசிகர்களைப் பார்த்து கையசைத்து தீபாவளி வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது வீட்டில் மனைவி லதா, மகள்கள், பேரப்பிள்ளைகள் உள்ளிட்ட குடும்பத்தினருடன் தீபாவளி பண்டிகையை மகிழ்ச்சியாகக் கொண்டாடினார்.
#Thalaivar family Diwali celebration 🎆 pics.. pic.twitter.com/YO4zIr8jXl
— Ramesh Bala (@rameshlaus) November 12, 2023
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனத் வீட்டில் எப்போதும் போல இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை நாளில் மகிழ்ச்சியாக இருந்தது. ஜெயிலர் திரைப்படத்தின் மிகப் பெரிய வெற்றியைக் கொண்டாடும் விதமாக, ரஜினிகாந்த் தனது குடும்பத்தினருடன் தீபாவளி பண்டிகையை பிரமாண்டமாக கொண்டாடினர். ரஜினிகாந்தின் மகள்கள் ஐஸ்வர்யா, சௌந்தர்யா ஆகியோர் தங்கள் குழந்தைகளுடன் சூப்பர் ஸ்டாரின் கோபாலபுரம் இல்லத்தில் தீபாவளியைக் கொண்டாடினார்கள். இவர்களுடன் ரஜினிகாந்த்தின் மனைவி லதா ரஜினிகாந்தின் சகோதரிகளும் கலந்து கொண்டு தீபாவளியைக் கொண்டாடினார்கள்.
Another closest video ❤️
— Suresh balaji (@surbalutwt) November 12, 2023
Gate opened #Jailer arrived
🔥🔥🔥🔥🔥#Rajinikanth | #SuperstarRajinikanth | #superstar@rajinikanth | #Thalaiver | #LalSalaam | #Thalaivar170 | #Thalaivar171 | #Diwali | #Diwali2023pic.twitter.com/dJpomRhLA1
ரஜினிகாந்தின் பேரக்குழந்தைகள் அவரிடம் ஆசி பெறும் படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன. ரஜினிகாந்த் தனது மகள்கள் மற்றும் பேரப்பிள்ளைகளுடன் சந்தோஷமாக தீபாவளி பண்டிகையை கொண்டாடிய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி ரஜினி ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது குடும்பத்தினருடன் தீபாவளி கொண்டாடியா புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
#Thalaivar family Diwali celebration 🎆 pics.. pic.twitter.com/YO4zIr8jXl
— Ramesh Bala (@rameshlaus) November 12, 2023
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தீபாவளி அன்று தனது வீட்டின் முன்பு திரண்டிருந்த ரசிகர்களைப் பார்க்க வெளியே வந்து கையசைத்து ரசிகர்களுக்கு தீபாவளி வாழ்த்து தெரிவித்தார்.
https://t.co/8Fhuv4qZt8#LalSalaam@ash_rajinikanth@arrahmanpic.twitter.com/I0sn73oniI
— Rajinikanth (@rajinikanth) November 12, 2023
ரஜினிகாந்த் தற்போது ஜெய் பீம் பட இயக்குனர் டி.ஜே. ஞானவேல் இயக்கத்தில் தலைவர் 170 படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அமிதாப் பச்சன், ஃபஹத் பாசில், ராணா டக்குபதி, மஞ்சு வாரியர், துஷாரா விஜயன் மற்றும் ரித்திகா சிங் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படம் முடிந்ததும், ரஜினிகாந்த் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.