Advertisment

ரஜினியின் ஜெயிலர் மேக்கிங் வீடியோ வெளியீடு… ஏப்ரல் ரிலீஸ் படக்குழு அறிவிப்பு

இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. மேலும், ஜெயிலர் படம் ஏப்ரலில் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
Rajinikanth, Jailor making, Jailer making, Jailer making glimpse video, sun pictures, superstar rajiikanth

இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. அதுமட்டுமில்லாமல், ஜெயிலர் படம் ஏப்ரலில் ரிலீஸ் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடித்த அண்ணாத்த படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை. இதைத் தொடர்ந்து, நடிகர் ரஜினிகாந்த் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியானது.

இதைத் தொடர்ந்து, நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படத்திற்கு ஜெயிலர் என்று பெயரிடப்பட்டு ஃபர்ஸ்ட் லுக் வெளியானது. ஜெயிலர் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. அனிருத் இசையமைக்கிறார்.

ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் 22ம் தேதி சென்னையில் ஷூட்டிங் தொடங்கியது. அப்போது ரஜினி நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டன. அது தொடர்பான புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலானது. ஜெயிலர் படத்தில் ரஜினிகாந்த் உடன் பிரியங்கா அருள்மோகன், கன்னட நடிகர் சிவ ராஜ்குமார் ஆகியோர் நடிப்பதாக தகவல் வெளியானது.

இந்த நிலையில், ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் படத்தின் மேக்கிங் தொடர்பான க்ளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. ஜெயிலர் மேக்கிங் வீடியோவை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவில் ஜெயிலர் படப்பிடிப்பு தளத்தில் செட்டில் ரஜினிகாந்த்க்கு இயக்குனர் நெல்சன் திலீப்குமார் காட்சிகளை விளக்குகிறார். அதுமட்டுமில்லாமல், ஜெயிலர் படம் 2023ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜெயிலர் படத்தில் ரஜினிகாந்த் ஸ்டைலாக அமர்ந்திருக்கும் வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்று வைரலாகி வருகிறது. ரஜினி மாஸாக ஸ்டைலாக இருக்கும் வீடியோவை ரசிகர்கள் சமூக ஊடங்களில் பகிர்ந்து கொண்டாடி வருகின்றனர்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Rajini Rajinikanth
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment