ரஜினிகாந்தின் காலா திரைப்படம், நாளை உலகம் முழுவதும் வெளியாகவிருக்கிறது. இருப்பினும், அமெரிக்காவில் தற்போது ஜூன் 7 என்பதால், அங்கு படம் ரிலீசாகிவிட்டது. அதுமட்டுமின்றி, ஐக்கிய அமீரகத்திலும் காலா ரிலீசாகி உள்ளது.
இந்நிலையில், ஐக்கிய அமீரகத்தில் இருந்து இப்படத்தின் முதற்கட்ட விமர்சனம் வெளியாகியுள்ளது. அதில், 'காலா திரைப்படத்தில் இதுவரை பார்க்காத ரஜினியை பார்க்கலாம் என்றும், ஸ்டைலான ஆக்ஷன் மற்றும் வசனங்களுடன் ரஜினி அசத்தியுள்ளார்' என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், வில்லனாக நடித்துள்ள நானா படேகர், ஒவ்வொரு காட்சியிலும் ரஜினிக்கு இணையாக நடித்துள்ளார் என்றும், இப்படம் நிச்சயம் பிளாக்பஸ்டர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.