Advertisment

காலா டீசர் : அம்பேத்கர் முழக்கம், சிறுத்தைகள் எதிர்ப்பு

ரஜினிகாந்த் நடித்து பா.ரஞ்சித் இயக்கியுள்ள ‘காலா’ திரைப்படத்தின் டீஸர் இன்று வெளியான நிலையில், பலரும் டீஸரை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
காலா டீசர் : அம்பேத்கர் முழக்கம், சிறுத்தைகள் எதிர்ப்பு

ரஜினிகாந்த் நடித்து பா.ரஞ்சித் இயக்கியுள்ள ‘காலா’ திரைப்படத்தின் டீஸர் இன்று (வெள்ளிக்கிழமை) வெளியான நிலையில், பலரும் டீஸரை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

Advertisment

காலா திரைப்படத்தை நடிகர் தனுஷின் ‘உண்டர்பார்’ நிறுவனம் தயாரிக்கிறது. இத்திரைப்படத்தின் டீஸர் நேற்று (வியாழக்கிழமை) வெளியாகவிருந்த நிலையில், காஞ்சி மடாதிபதி ஜெயேந்திரர் இறப்பையடுத்து ஒத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில், இன்று அத்திரைப்படத்தின் டீஸர் வெளியானது. அதில், ”காலான்னா கருப்பு. சண்டைபோட்டு காப்பவன்”, என ரஜினியின் கதாபாத்திரமான ‘கரிகாலன்’ குறித்து அறிந்துகொள்ளும் வகையில் வசனம் இடம்பெற்றிருந்தது. மேலும், ரஜினி, “கருப்பு உழைப்பின் வண்ணம். என் சால்ல வந்து பாரு. அழுக்கு அத்தனையும் வண்ணமா தெரியும்”, என வசனம் பேசுகிறார். தன் மக்களை காக்கும் கதாபாத்திரத்தில் ரஜினி இந்த திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.

இந்த திரைப்படத்தில் நெல்லை பாணியில் வசனங்களை பேசியிருக்கிறார். “வேங்கை மகன் ஒத்தையில நிக்கன். தில்லு இருந்தா மொத்தமா வாங்கல”, என நெல்லை பாசை பேசி அசத்தியிருக்கிறார் ரஜினி.

காலை 11 மணிவரை இந்த டீஸரை 24 லட்சத்துக்கும் அதிகமானோர் யூடியூபில் பார்த்துள்ளனர்.

 

பிற்பகல் 1.30 : காலா படத்தில் வணிக ரீதியாக அம்பேத்கர் முழக்கங்களை பயன்படுத்தியிருப்பதற்கு விடுதலை சிறுத்தைகள் பொதுச்செயலாளர் ரவிக்குமார் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். ரஜினி புதிதாக தொடங்க இருக்கும் கட்சிக்கு தாழ்த்தப்பட்ட சமூக இளைஞர்களை இழுக்கும் முயற்சி இது என்றும் ரவிக்குமார் சாடினார்.

பகல் 12.30 : ‘வேங்கை மகன்.. ஒத்தைல நிக்கேன். தில்லு இருந்தா மொத்தமா வாங்கலே!’ என டீசரில் ரஜினி பேசும் பஞ்ச் டயலாக், மொத்த அரசியல் கட்சிகளுக்குமான சவால் என அரசியல்படுத்தி பேச ஆரம்பித்துவிட்டார்கள் ரஜினி ரசிகர்கள்!

பகல் 12.00 : வட இந்தியாவில் ஹோலி கொண்டாட்டத்திற்கு மேலும் வண்ணம் சேர்க்கும் வகையில் காலா டீசர் வெளியாகி இருப்பதாக கருத்துகள் வெளியிடப்பட்டு வருகின்றன. டீசர் வெளியாகி 11 மணி நேரத்தில் 3.5 மில்லியன் பேர் யூ டியூப்பில் பார்த்திருக்கிறார்கள்.

காலை 10.53:

காலை 10.21:காலா இந்தி திரைப்படத்தின் டீஸர்

காலை 10.13: ரசிகர்கள் என்ன சொல்கிறார்கள்?

காலை 10.08: நடிகை கஸ்தூரி

காலை 9.52: பாடகர் க்ரிஷ்

Rajinikanth Kaala
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment