சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மிகவும் எதிர்பார்க்கப்படும் வரவிருக்கும் இரண்டு படங்களான வேட்டையன் மற்றும் கூலி ஆகியவவை மகிழ்ச்சியான ஓணம் கொண்டாட்டத்தில் இணைந்துள்ளன. கூலி படத்தின் தயாரிப்பாளர்கள் படத்தின் செட்டில் இருந்து, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது தனித்துவமான ஸ்டைலில் நடனமாடிய ஒரு வீடியோவைப் பகிர்ந்துள்ளனர். ரஜினிகாந்த் தனது வரவிருக்கும் வேட்டையன் படத்திலிருந்து ‘மனசிலாயோ’ பாடலுக்கு லைவ் நடனமாடுவதைப் படம்பிடித்துள்ளனர்.
ஆங்கிலத்தில் படிக்க: Rajinikanth’s Onam celebration on Coolie set has a Vettaiyan twist. Watch
இந்த வீடியோவில், ரஜினிகாந்த் அடர் பச்சை நிற சட்டை மற்றும் பாரம்பரிய வேஷ்டி அணிந்துகொண்டு கூலி படக் குழுவினருடன் நடனமாடுகிறார். கூலி படத்தை தயாரிக்கும் ஸ்டுடியோவான லைகா புரொடக்ஷன்ஸ், சமூக வலைதளங்களில் வீடியோவைப் பகிர்ந்துகொண்டு, “கூலி குழுவுடன் ஓணம் வைப்ஸ்! தலைவர் மற்றும் கூலி குழு, ஓணத்திற்காக வேட்டையன் வழியில் சென்ற போது ‘மனசிலாயோ’ டான்ஸ்.” என்று பதிவிட்டுள்ளனர்.
ரஜினிகாந்த் மற்றும் மஞ்சு வாரியர் நடித்துள்ள வேட்டையன் படத்தில் மனசிலாயோ என்ற பாடல் இடம்பெற்றுள்ளது; வேட்டையன் படத்துக்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார், ஏ.ஐ தொழில்நுட்பத்தில், மலேசியா வாசுதேவன், யுகேந்திரன் வாசுதேவன் மற்றும் தீப்தி சுரேஷ் ஆகியோர் பாடியுள்ளனர். வேட்டையன் படத்தில், ரஜினிகாந்த் உடன் அமிதாப் பச்சன், ராணா டகுபதி, ஃபகத் பாசில், மஞ்சு வாரியர், ரித்திகா சிங் மற்றும் துஷாரா விஜயன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஜெய்பீம் புகழ் இயக்குனர் த.செ. ஞானவேல் இயக்கியுள்ள வேட்டையன் திரைப்படம் அக்டோபர் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
மறுபுறம், கூலி படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் மற்றும் செப்டம்பர் 2 தேதிகளில் தொடங்கியது, விஜய்யின் லியோ படத்தை இயக்கி முடித்ததும், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூலி படத்தின் போஸ்டரைப் பகிர்ந்து, ரஜினிகாந்தின் கதாபாத்திரமான தேவாவின் பெயரை வெளிப்படுத்தினார். சுவரொட்டியில், 1421 எண் கொண்ட கை பேட்ஜை ஒத்த ஓவல் கோல்டன் பிளேட்டின் பின்புறத்தை ரஜினிகாந்த் பரிசோதிப்பது போல் தெரிகிறது. அந்த போஸ்டருக்கு லோகேஷ், “சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சார், கூலியில் தேவாவாக நடிக்கிறார். இதற்கு மிக்க நன்றி ரஜினிகாந்த் சார்.” என்று பதிவிட்டிருந்தார்.
கூலி படத்தில் ரஜினிகாந்த் உடன் உபேந்திரா, சத்யராஜ், ஸ்ருதி ஹாசன், நாகார்ஜுனா மற்றும் சௌபின் ஷாஹிர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படம் 2025-ல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.