/indian-express-tamil/media/media_files/abgzbL7AmR3yomUtIHyu.jpg)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் இந்த ஆண்டின் பிற்பகுதியில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. அதே நேரத்தில், கூலி படத்தின் தயாரிப்பு பணிகள் நடந்து வருகிறது. இதனால், 2024-ம் ஆண்டு ரஜினி ரசிகர்களுக்கு ஒரு பெரிய ஆண்டாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆங்கிலத்தில் படிக்க: Rajinikanth’s Vettaiyan gets release date; Superstar shares update on Coolie
ரஜினிகாந்த் வேட்டையன் படத்தின் மூலம் வெள்ளித்திரையில் வலம் வரத் தயாராகி வருகிறார். வேட்டையன் திரைப்படம் அக்டோபர் 25-ம் தேதி வெளியாகும் என்பதால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரசிகர்கள் எப்போது அந்த நாள் வரும் என்று எண்ணிக்கொண்டிருக்கிருக்கிறார்கள். ஜெய்பீம் புகழ் இயக்குனர் த.செ. ஞானவேல் இயக்கிய வேட்டையன் படத்தில், அமிதாப் பச்சன் மற்றும் ஃபகத் பாசில் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளதால், இந்தத் திரைப்படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள வேட்டையன் படம் ஒரு ஆக்ஷன் கலந்த பொழுதுபோக்கு படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரஜினிகாந்த் அவரது ஸ்டைலில் பெரிய ஆளுமையுடன் ஒத்துப்போகும் பாத்திரத்தில் காண்பிக்கிறார். படத்தின் வெளியீட்டு தேதியை தயாரிப்பாளர்கள் இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தாத நிலையில், ரஜினிகாந்த் தனது இமயமலை பயணத்தின் போது அதை அறிவித்தார்.
In between their spiritual conversation . He enquired about his movies
— Suresh Balaji (@surbalu) June 2, 2024
Update from #Thalaivar :
“#Vettaiyan - I completed my portions Oct10 Dussehra release #Coolie - June 10th shooting starts “
🔥🔥🔥🔥🔥🔥🔥#Rajinikanth | #SuperstarRajinikanth | #superstar@rajinikanth… pic.twitter.com/wKVCZeVqjR
ரஜினிகாந்த் தனது இமயமலை ஆன்மீகப் பயணத்தில், ஏராளமான யோகிகளையும் சாதுக்களையும் சந்தித்தார். யோகிகளில் ஒருவருடனான உரையாடலில், அவர் தனது வரவிருக்கும் திரைப்படமான வேட்டையன் பற்றிய தகவலைப் பகிர்ந்து கொண்டார். அதில் “வேட்டையன் தசராவுக்கு ரிலீஸ் ஆகிறது. எனது பகுதிகளை முடித்துவிட்டேன். மற்ற நடிகர்கள் நடிக்கும் படப்பிடிப்பு இன்னும் நடந்து வருகிறது. படம் அக்டோபர் 10 அல்லது அதற்கு மேல் வெளியாகும்” என்று கூறினார்.
இயக்குனர் லோகேஷ் கனகார இயக்கும் ரஜினிகாந்த் தனது படத்திற்கு கூலி என்று பெயர் வைத்துள்ளது குறித்து விவாதித்தார். “ஒரு புதிய படமும் உள்ளது. ஜூன் 10ம் தேதி முதல் படப்பிடிப்பை தொடங்குகிறேன்” என்று ரஜினிகாந்த் கூறினார்.
வேட்டையான் இந்த ஆண்டின் பிற்பகுதியில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. கூலி படத்தின் தயாரிப்பு பணிகள் முன்னேறி வருகிறது, 2024 ரஜினிகாந்த் மற்றும் அவரது ரசிகர்களுக்கு ஒரு பெரிய ஆண்டாக அமைய உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.