/tamil-ie/media/media_files/uploads/2018/08/kolamaavu-kokila-1.jpg)
kolamaavu kokila, ரஜினி
கடந்த வாரம் வெளியாகி திரையரங்குகளில் பெரிய அளவில் ஹிட் ஆகிய கோலமாவு கோகிலா படத்தை பார்த்த ரஜினி படத்தின் இயக்குநர் நெல்சனை பாராட்டினார்.
கடந்த 17ம் தேதி இயக்குநர் நெல்சன் இயக்கத்தில், லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் ‘ கோலமாவு கோகிலா ’ திரைப்படம் வெளியானது. இப்படம் வெளியான இரண்டாவது நாளே பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷனை அள்ளியது.
கோலமாவு கோகிலா படத்தை பாராட்டிய ரஜினி:
நயன்தாரா உடன் இணைந்து யோகி பாபு, ஜேக்கலின், சரண்யா மற்றும் பலர் ஆகியோர் நடித்துள்ளனர். கடந்த வெள்ளிக் கிழமை வெளியான இத்திரைப்படத்தை பொதுமக்கள் மட்டும் ஆர்வத்துடன் பார்க்கவில்லை, பல பிரபலங்களும் பார்த்து வருகின்றனர்.
அந்த வகையில், நடிகர் ரஜினிகாந்த் கோலமாவு கோகிலா படத்தை பார்த்துள்ளார். இப்படம் அவருக்கு மிகவும் பிடித்துப் போனதால், இயக்குநர் நெல்சனை தொலைப்பேசியில் அழைத்து பாராட்டியுள்ளார். இதனை நெல்சன் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
Got a surprise call ,The moment when Thalaivar @rajinikanth said " loved it , sirichu sirichu enjoyed it " ...Big moment for me and team #KolamaavuKokila Thank you sir????????feeling motivated ???? #nayanthara@anirudhofficial@LycaProductions#coco#kolamaavukokilablockbuster
— Nelson Dilipkumar (@Nelson_director) 19 August 2018
அதில், “ஒரு இன்ப அதிர்ச்சியாக எனக்கு தலைவர் ரஜினிகாந்திடம் இருந்து கால் வந்தது. கோலமாவு கோகிலா படத்தை பார்த்துவிட்டு ‘ ரொம்ப புடிச்சிருக்கு... சிரிச்சி சிரிச்சி என்ஜாய் பண்ணேன்’ என்று சொன்னார். இது இந்த படக்குழுவுக்கே பெருமையான தருணம்.” என்று பகிர்ந்திருந்தார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.