/tamil-ie/media/media_files/uploads/2017/12/010.jpg)
ரஜினி நடிப்பில் உருவாகி வரும் 2.0 படம் மீண்டும் தள்ளிப்போகிறது. தமிழ் ஏப்ரல் மாதம் படம் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அநேகமாக தமிழ் புத்தாண்டான ஏப்ரல் 14ல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
லைகா தயாரிப்பில், ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்ஷ்ய்குமார், எமி ஜாக்ஷன் நடிக்கும் 2.0 படம் பிரமாண்டமாக தயாராகி வருகிறது. 3டியில் தயாராகும் இந்த படம் உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், கிராபிக்ஸ் காட்சிகள் உள்பட போஸ்ட் புரடக்ஷன் வேலைகள் வேகமாக நடந்து வருகிறது.
இந்நிலையில் படம் 2018, ஜனவரி 25ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், அதே நாளில் அக்ஷ்ய்குமார் நடித்த பேட்மேன் படம் வெளியாவதாக அற்விப்பு வெளியானது. அப்போதே 2.0 படம் தள்ளிப்போகலாம் என பரபரப்பு ஏற்பட்டது.
Official Press Release: "2.0" - to hit screens on April 2018#2Point0#April2018pic.twitter.com/fql98ZXWVY
— Lyca Productions (@LycaProductions) 2 December 2017
இந்நிலையில் லைகா நிறுவனம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், 2.0 படம், 2018ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தயாரிப்பு நிறுவனம் சார்பாக ராஜூ மகாலிங்கம் அறிவித்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.