Darbar: நடிகர் ரஜினிகாந்த் தற்போது தர்பார் திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். அனிருத் இசையமைக்கிறார். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவாளராகப் பணிபுரிய, ஸ்ரீகர் பிரசாத் எடிட்டராக பணிபுரிகிறார்.
இப்படத்தின் படபிடிப்பு கடந்த 10-ம் தேதி மும்பையில் துவங்கியது. பிரேக் இல்லாமல் முழு வீச்சில் நடக்கும் இதன் ஷூட்டிங்கில் கலந்துக் கொண்ட ரஜினி, மக்களவைத் தேர்தலுக்காக சென்னை திரும்பினார்.
தற்போது மீண்டும் அவர் படப்பிடிப்பில் கலந்துக் கொண்டுள்ளார். இந்நிலையில் அவரது ஷூட்டிங் ஸ்பாட் படங்கள் வெளியாகி இணையத்தைக் கலக்கி வருகின்றன.