ரஜினி படத்தில் பிரமாண்டம் இருக்காது : இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் பேட்டி

ரஜினிகாந்த் - சன் பிக்சர்ஸ் - கார்த்திக் சுப்புராஜ் என்ற காம்பினேஷன் பெரிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. படத்தின் பெயர் பற்றிய அறிவிக்கப்படவில்லை.

ரஜினிகாந்த் - சன் பிக்சர்ஸ் - கார்த்திக் சுப்புராஜ் என்ற காம்பினேஷன் பெரிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. படத்தின் பெயர் பற்றிய அறிவிக்கப்படவில்லை.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Rajinikanth, Kaala, Court refused to ban

Rajinikanth, Kaala, Court refused to ban

சூர்ப்பர் ஸ்டர் ரஜினிகாந்த் நடிக்கும் அடுத்த படத்தினை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. இந்த படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்குகிறார்.

Advertisment

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக அறிவித்துள்ளார். இந்நிலையில் அவர் நடித்து முடித்துள்ள காலா படம் ஏப்ரல் மாதம் 27ம் தேதி வெளியாக உள்ளது. ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்த 2.0 படத்தின் இறுதி கட்ட பணிகள் நடந்து வருகின்றன.

இந்நிலையில்தான் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கப் போவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. பீசா, ஜிகிர்தண்டா, இறைவி ஆகிய படங்களை இயக்கியவர்தான் கார்த்திக் சுப்புராஜ்.

ரஜினிகாந்த் - சன் பிக்சர்ஸ் - கார்த்திக் சுப்புராஜ் என்ற காம்பினேஷன் பெரிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. படத்தின் பெயர் பற்றிய அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

Advertisment
Advertisements

இந்நிலையில் படம் குறித்து இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் பேசிய போது, ‘‘இந்த படத்தில் பிரம்மாண்டம் இருக்காது. ஆனால் கதையிலும் திரைக்கதையிலும் பிரம்மாண்டம் இருக்கும். மேலும் ரஜினி படத்தில் ரசிகர்கள் எதிர்பார்க்கும் அனைத்து அம்சங்களும் இருக்கும்’’ என்று தெரிவித்தார்.

Sun Pictures

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: