ரஜினி நடித்துள்ள வேட்டையன் திரைப்படமும், சூர்யா நடித்துள்ள கங்குவா திரைப்படமும் அக்டோபர் 10-ம் தேதி ஒரே நாளில் திரையரங்குகளில் வெளியாகிறது. ஜெய்பீம் புகழ் த.செ. ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் வேட்டையன் திரைப்படம் அக்டோபர் 10-ம் தேதி வெளியாகும் என தயாரிப்பு நிறுவனமான லைகா நிறுவனம் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், ஃபஹத் ஃபாசில், ராணா, மஞ்சு வாரியர், துஷாரா விஜயன் உள்ளிட்டோர் நடித்திருக்கும் படம் வேட்டையன். ரஜினி போலீஸ் அதிகாரியாக இப்படத்தில் நடித்துள்ளார். லைகா நிறுவனம் தயாரித்துள்ள படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னட மொழிகளில் அக்டோபர் 10-ம் தேதி வெளியாகிறது என பட தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. இந்நிலையில், சிறுத்தை சிவா சூர்யா நடித்துள்ள நீண்ட நாட்களாக ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் கங்குவா திரைப்படமும் அதே நாளில் அக்டோபர் 10-ம் தேதி வெளியாக உள்ளது.
கங்குவா திரைப்படம் அக்டோபர் 10-ம் தேதி வெளியாகும் என படக்குழு முன்பே அறிவித்திருந்தது. எந்த காலத்திலும் நடிகர் ரஜினி படத்துடன் போட்டியிட மாட்டேன் என கங்குவா தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா சமீபத்தில் கூறியிருந்த நிலையில் இப்போது ஒரே நாளில் பட ரிலீஸ் தேதி அறிவிப்பால் கங்குவா படம் தள்ளுப்போகுமா என ரசிகர்கள் குழப்பமடைந்துள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“