Advertisment

காதல் மற்றும் ரொமான்ஸ்... ''இனிமேல்'' பாடல் படமாக்கப்பட்டது எப்படி? மேக்கிங் வீடியோ வைரல்

ஸ்ருதி ஹாசன் - லோகேஷ் கனகராஜ் நடிப்பில் வெளியாகியுள்ள இனிமேல் பாடலின் மேக்கிங் வீடியோ தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
Lokesh Shrutiha

''இனிமேல்'' மேக்கிங் வீடியோ

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக மாறியுள்ளவர் லோகேஷ் கனகராஜ். மாநகரம்கைதிமாஸ்டர்விக்ரம்லியோ என 5 படங்களை மட்டுமே இயக்கியிருந்தாலும்5 படங்களுமே ப்ளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. குறிப்பாக விகரம்லியோ என அவர் இயக்கிய கடைசி 2 படங்களும் வசூலில் பெரிய சாதனை படைத்த நிலையில்அடுத்ததாக ரஜினிகாந்த் நடிக்கும் 171-வது படத்தை இயக்க உள்ளார்.

Advertisment

இதனிடையே அவ்வப்போது திரைப்படங்களிலும் ஆல்பம் பாடல்களிலும் நடித்து வருகிறார். அந்த வகையில், சமீபத்தில் வெளியான சிங்கப்பூர் சலூன் என்ற படத்தில் நடித்திருந்த நிலையில், தற்போது ஸ்ருதிஹாசனுடன்  ‘’இனிமேல்’’ என்ற பாடலில் நடித்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியான இந்த பாடலின் போஸ்டர் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

அதனைத் தொடர்ந்து வெளியான பாடலின் ப்ரமோ பாடல் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்த நிலையில், லோகேஷ் மற்றும் ஸ்ருதியின் காதல் மற்றும் ரெமான்ஸ் காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றிருந்தது. இதனையடுத்து கடந்த மார்ச் 25-ந தேதி வெளியான ‘’இனிமேல்’’ காதல் மற்றும் ரொமான்ஸ் கட்சிகள் நிரம்ப ரசிகர்கள் கவனத்தை ஈர்த்தது. இந்த பாடலில் லோகேஷின் நடிப்பும்ஸ்ருதியுடன் அவரின் ரோமான்சும் பலருக்கும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.

ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்க, கமல்ஹாசன் வரிகளில், ஸ்ருதிஹாசன் இயக்கி இந்த ஆல்பம் பாடலில் நடித்துள்ளார். இந்த பாடல் பெரிய வெற்றியை பெற்றுள்ள நிலையில், தற்போது இந்த பாடல் உருவான விதம் தொடர்பான மேக்கிங் வீடியோவை குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோவும் தற்போது அதிக கவனம் ஈர்த்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Lokesh Kanagaraj Shruti Haasan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment