scorecardresearch

மம்முட்டியின் ‘ஷைலாக்’: 28 ஆண்டுகள் கழித்து மீண்டும் இணையும் ராஜ்கிரண் – மீனா

Shylock: ராஜ்கிரணுக்கு ஜோடியாக மீனா நடிக்கிறார் இவர்கள் இருவரும் 28 ஆண்டுகள் கழித்து மீண்டும் இணைகிறார்கள். 

shylock, mammootty, meena, rajkiran
shylock

90-களில் ‘என் ராசாவின் மனசிலே’ படத்தைப் போன்று, கிராமத்து பின்னணியை மையமாகக் கொண்ட படங்களில் ஹீரோவாக நடித்திருப்பவர் ராஜ்கிரண். அந்தப் படத்தில் நடிகை மீனா ஹீரோயினாக நடித்திருந்தார். பின்னர் சப்போர்ட்டிங் கதாபாத்திரங்களில் நடிக்கத் தொடங்கினார் ராஜ்கிரண்.

சிறிது இடைவெளிவிட்டு ‘தவமாய் தவமிருந்து’, ‘பா.பாண்டி’ ஆகியப் படங்களில் ஹீரோவாகவும் நடித்திருக்கிறார். இந்நிலையில் தற்போது மலையாள சினிமாவில் அறிமுகமாக இருக்கிறார் ராஜ்கிரண்.

அந்தப் படத்தின் பெயர் ‘ஷைலாக்’. இந்தப் படத்தில் நடிகர் மம்முட்டி ஹீரோவாக நடிக்கிறார். படத்தை இயக்குனர் அஜய் வாசுதேவ் இயக்குகிறார். இவர் ஏற்கனவே மம்முட்டி நடித்த ’ராஜாதி ராஜா’ என்ற படத்தை இயக்கியவர். அந்தப் படம் மாபெரும் வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. மம்முட்டியுடன் ராஜ்கிரண் நடிக்கும் ’ஷைலாக்’ படத்தின் ஷூட்டிங் நேற்று  தொடங்கப்பட்டது. இதில் ராஜ்கிரணுக்கு ஜோடியாக மீனா நடிக்கிறார் இவர்கள் இருவரும் 28 ஆண்டுகள் கழித்து மீண்டும் இணைகிறார்கள்.

படம் இந்தாண்டு கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு வெளியாகிறது.

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Rajkiran meena mammootty shylock malayalam movie

Best of Express