Raju Jeyamohan Tamil News: விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய பிக்பாஸ் 5-வது சீசன் கடந்த மாதம் முடிவுக்கு வந்தது. இந்த சீசனின் கிராண்ட் ஃபினாலாவில் அனைவரும் எதிர்பார்த்தபடி ராஜு ஜெயமோகன் டைட்டிலை வென்றார். அவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

பிக்பாஸ் 5-வது சீசன் – பிரியங்கா ரன்னர்; ராஜு வின்னர்
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5-வது சீசனில் இசைவாணி, ராஜு ஜெயமோகன், மதுமிதா, அபிஷேக் ராஜா, நமீதா மாரிமுத்து, பிரியங்கா, அபிநய் வாடி, சின்ன பொண்ணு, பாவனி, நாடியா சங், வருண், இமான் அண்ணாச்சி, ஐக்கி பெர்ரி, ஸ்ருதி, அக்ஷரா, தாமரை செல்வி, சிபி சந்திரன், நிரூப் நந்தகுமார் ஆகிய 18 போட்டியாளர்கள் பங்கேற்றனர்.
இதில் அமீர், நிரூப், பிரியங்கா, ராஜு, பாவனி ஆகிய ஐந்து பேர் இறுதிப் போடிக்கு தகுதி பெற்றனர். இதற்குமுன் சிபி, ரூ.12 லட்சத்துடன் வெளியேறினார். எக்விக்க்ஷன் சுற்றில் அமீர் மற்றும் நிரூப் வெளியேறினர்.
மீதம் இருந்த போட்டியாளர்கள் ராஜு, பிரியங்கா, பாவனி ஆகிய மூவரில் பிரியங்கா ரன்னராகவும், ராஜு டைட்டில் வின்னராகவும் அறிவிக்கப்பட்டார்.
71 லச்சத்துடன் வெளியேறிய ராஜு

பிக்பாஸ் சீசன் 5 டைட்டிலை வென்ற ராஜுவுக்கு ரூபாய் 50 லட்சம் பரிசுத் தொகையாக வழங்கப்பட்டது. இதுதவிர, பிக்பாஸ் வீட்டில் 16 வாரங்கள் இருந்த ராஜுவுக்கு வாரத்திற்கு ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் சம்பளம் என்ற கணக்கில், 16 வாரங்களுக்கு ரூ.21 லட்சம் சம்பளமாக வழங்கப்பட்டது. ஆக மொத்தம் பிக்பாஸில் அவர் பங்கேற்றதன் மூலம் ரூ. 71 லச்சத்துடன் ராஜு வெளியேறியுள்ளார்.
புதிய சீரியலில் நடிக்கிறாரா ராஜு?
பொதுவாக பிக்பாஸ் நிகழ்ச்சியை முடித்ததும் அதில் பங்குபெற்ற போட்டியாளர்கள் திரைப்படங்களில் அல்லது சின்னத்திரை தொடர்களில் கமிட் ஆகிவிடுவார்கள். மேலும், அது குறித்த அறிவிப்பையும் உடனே வெளியிடுவார்கள். ஆனால், இந்த சீசனில் கலந்துகொண்ட போட்டியாளர்கள் ஒருவர் கூட அப்படிப்பட்ட எந்த அறிவிப்பையும் தற்போது வரை வெளியிடவில்லை.

இந்நிலையில், பிக்பாஸ் சீசன் 5 வின்னர் ராஜு, “தமிழும் சரஸ்வதியும்” சீரியல் நடிகர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டுள்ளார். இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது. மேலும், இந்த புகைப்படத்திற்கு கமெண்ட்டுகளை பதிவிட்டு வரும் ரசிகர்கள், விஜய் டிவி சீரியலில் மீண்டும் நடிக்கிறாரா ராஜூ? என்பது போன்ற கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.
இதோ அந்த புகைப்படம்…

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“