என்னைப்போல் யாராவது உட்கார்ந்து எந்திரிக்க முடியுமா (squats) என்று நடிகை ரகுல் பிரீத் சிங் சவால் விடுத்துள்ளார்.
ஸ்குவாட் (squat) செய்வதால், உடலில் உள்ள மிதமிஞ்சிய கலோரிகள் எரிக்கப்பட்டு நமது உடலை பிட் ஆக வைத்திருக்க உதவுகிறது. இந்த உடற்பயிற்சி எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. உங்களுக்கும் இது பிடித்திருந்தால் தொடர்ந்து செய்யுங்கள். உடலை திடகாத்திரமாக வைத்துக்கொள்ளுங்கள் என்று நடிகை ரகுல் பிரீத் சிங் தெரிவித்துள்ளார்.
புதிய படங்களில் நடிப்பதில் பிஸியாக இருந்தபோதிலும் ஒருநாள் கூட ஜிம்முக்கு போவதை ரகுல் பிரீத் சிங் தவிர்ப்பதில்லை, அந்த அளவுக்கு தனது உடலை பேணிக்காப்பதில் அதிகளவு அக்கறை செலுத்துகிறார் ரகுல்.
இன்ஸ்டாகிராமில், தான் ஜிம்மில் ஒர்க் அவுட் செய்யும் வீடியோவை அவர் பகிர்ந்துள்ளார்.
ஸ்குவாட் செய்யும் வீடியோவை பகிர்ந்துள்ள அவர் அதில் குறிப்பிட்டுள்ளதாவது, இந்த ஸ்குவாட்டை செய்வதனால், உடலிலுள்ள அனைத்து தசைகளும் ஒரேநேரத்தில் இயங்கி எல்லா உறுப்புகளுக்கும் புத்துணர்ச்சியை அளிக்கிறது.
இந்த ஸ்குவாட் பயிற்சியை, 2003ம் ஆண்டு முதல் மை பிட்னஸ் டிரெய்னர் ஸ்டூடியோ நிறுவனர் ஹாரிசன் ஜேம்ஸ் தோற்றுவித்தார். கடினமான உபகரணங்கள் இல்லாமல் செய்யக்கூடிய மிக எளிமையான பயிற்சி இது ஆகும். இந்த பயிற்சிக்கென தனியான உணவுக்கட்டுப்பாடுகள் போன்றவை தேவையில்லை. 100 சதவீத முழுமையான பலனை, இந்த பயிற்சி தரவல்லது.
ரகுல் பிரீத் சிங், ஜிம்மில் 80 கிலோ பளுவை தூக்கிய வீடியோவையும் அவர் வெளியிட்டுள்ளார்.
அதேபோல், 170 கிலோ டெட்லிப்ட்டை, தொடர்ந்து 5 முறை தூக்கி பயிற்சி செய்ததையும் ரகுல் வீடியோவாக வெளியிட்டுள்ளார்.
கராத்தேவில் 2016ம் ஆண்டில் புளு பெல்ட் வென்றுள்ள ரகுல் பிரீத் சிங், நடிப்புத்துறையில் முழு அர்ப்பணிப்பு காட்டுவதோடு மட்டுமல்லாது, முன்னணி உடற்பயிற்சி மையத்தின் பங்குதாரராகவும் உள்ளார். இவருக்கு ஐதராபாத்தில் 2 உடற்பயிற்சி மையங்களும், விசாகப்பட்டினத்தில் ஒரு உடற்பயிற்சி மையமும் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
ஜிம்மில் ஒர்க்அவுட் செய்யும் வீடியோக்களை, சமந்தா அவ்வப்போது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வந்த நிலையில், நடிகை ரகுல் பிரீத் சிங்கும் அதை கடைப்பிடிக்க துவங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.