/tamil-ie/media/media_files/uploads/2023/03/jr-ntr-deepika-padukone.jpg)
RRR இன் ஆஸ்கார் விருது ராம் சரண், ஜூனியர் என்டிஆர் மற்றும் தீபிகா படுகோன் ஆகியோருக்கு ஒரு பெரிய தருணம்.
எஸ்.எஸ்.ராஜமௌலியின் ஆர்.ஆர்.ஆர் (RRR) படத்தின் ‘நாட்டு நாட்டு’ பாடல் 95வது அகாடமி (ஆஸ்கர்) விருதுகளில் சிறந்த ஒரிஜினல் பாடலுக்கான விருதை வென்று, வரலாறு படைத்தது. இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணி மற்றும் பாடலாசிரியர் சந்திரபோஸ் ஆகியோர் விருதை வாங்க மேடைக்கு சென்றபோது, ஆர்.ஆர்.ஆர் குழுவின் மற்ற உறுப்பினர்களின் உணர்வுகளைப் படம் பிடிக்க கேமராக்கள் பார்வையாளர்களை நோக்கி சென்றன.
பாடலுக்கு விருது அறிவிக்கப்பட்டதும் படத்தின் நட்சத்திரங்களான ராம் சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் இருவரும் ஒருவரையொருவர் கட்டித்தழுவினர். இந்த வீடியோவை ராம் சரண் மனைவி உபாசனா காமினேனி தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரிகளில் பகிர்ந்துள்ளார்.
இதையும் படியுங்கள்: ஆஸ்கர் விருது வென்றது ஆர்.ஆர்.ஆர் படத்தின் ‘நாட்டு நாட்டு’ பாடல்.. வெற்றியாளர்கள் பட்டியல் இங்கே!
Finally Charan and Tarak's reactions to #RRR winning #Oscars for Best Song! You worked so hard @AlwaysRamCharan and @tarak9999.
— N.N (@Noori_NN) March 13, 2023
Upasana is the real MVP.#NaatuNaatuForOscars#RRRmovie#RamCharan#JrNTR@mmkeeravaani@boselyricist@ssrajamoulipic.twitter.com/2Yk4q56crJ
எம்.எம்.கீரவாணி மேடையில் பேசும்போது தீபிகா படுகோனின் உணர்வுகளும் கேமராக்களில் சிக்கியது. இசையமைப்பாளர் பாடியபோது தீபிகா படுகோன் உணர்ச்சிவசப்பட்டு காணப்பட்டார்.
முன்னதாக விழாவில், தீபிகா படுகோன் நாட்டு நாட்டு பாடலின் கலைஞர்களை மேடையில் அறிமுகப்படுத்தினார். தீபிகா பாடலை "பேரொலி" (வெறித்தனம்) என்று அழைத்தார், மேலும் அவர் பாடலின் நடனம் பற்றி பேசுகையில், பார்வையாளர்கள் அவரை உற்சாகப்படுத்தினர். பாடலுக்கு கால பைரவா மற்றும் ராகுல் சிப்லிகஞ்ச் ஆகியோரின் நடனத்தைத் தொடர்ந்து டால்பி தியேட்டரில் கரவொலி எழுப்பப்பட்டது.
நாட்டு நாட்டு பாடலுக்கு விருது மேடையில் அறிவிக்கப்பட்டவுடன் இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி தனது இருக்கையில் இருந்து ஏறக்குறைய குதித்தார். அப்போது அவர் தனது மனைவி ரமா ராஜமௌலியை கட்டிப்பிடித்து உற்சாகத்துடன் கத்தினார்.
RRR இன் நாட்டு நாட்டு பாடல் முன்பு இதே பிரிவில் கோல்டன் குளோப் விருதை வென்றது. இந்தியப் படமொன்றில் இருந்து ஆஸ்கர் விருதைப் பெற்ற முதல் பாடல் இதுவாகும். கால பைரவா மற்றும் ராகுல் சிப்லிகஞ்ச் ஆகியோரால் விழாவில் நடனக் கலைஞர்களுடன் பாடலின் நடனம் நிகழ்த்தப்பட்டது. இதனை தீபிகா படுகோன் அறிமுகப்படுத்தினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.