இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகராக இருக்கும் ராம்சரண் தர்காவுக்கு சென்று வழிபட்டுள்ளார். இந்த வீடியோ பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
Read In English: Ram Charan visits temple and dargah to fulfill AR Rahman’s old request; police resort to lathi charge to control crowd. Watch
தெலுங்கு சினிமாவின் மெகாஸ்டார் சிரஞ்சீவியின் மகன் என்ற அடையாளத்துடன் தெலுங்கு சினிமாவில் அறிமுகமாக ராம்சரண், தற்போது இந்திய சினிமாவின் முன்னணி நடிகராக இருக்கிறார். ஷங்கர் இயக்கத்தில் கேம் சேஞ்சர் படத்தில் ராம் சரண் நாயகனாக நடித்துள்ளார். இந்த படம் பொங்கல் தினத்தை முன்னிட்டு அடுத்த ஆண்டு ஜனவரி 10-ந் தேதி வெளியாக உள்ள நிலையில், படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
கேம் சேஞ்சர் படத்திற்கு பிறகு ராம்சரண் தற்போது புச்சி பாபு சனா இயக்கத்தில் தனது 16-வது படத்தில் நடிக்க உள்ளார். விஜய் சேதுபதி வில்லனாக நடித்த உப்பேன்னா என்ற படத்தை இயக்கி வெற்றி கண்ட இயக்குனர் புச்சி பாபு சனா அடுத்து ராம்சரண் நாயகனாக நடிக்கும் படத்தை இயக்க உள்ளார். தற்காலிகமாக ஆர்,சி16 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில், ஜான்வி கபூர் நாயகியாக நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
படத்தின் ப்ரி புரோடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வம் நிலையில், தற்போது நடிகர் ராம்சரண் தனது அடுத்த படத்தின் இயக்குனரான,புச்சி பாபு சனாவுடன் ஆந்திராவின் கடப்பாவுக்குச் சென்று பிராந்தியத்தில் உள்ள குறிப்பிடத்தக்க மதத் தளங்களாக இருக்கும், ஸ்ரீ விஜய துர்கா தேவி கோவில் மற்றும் அமீன் பீர் தர்காவில் பிரார்த்தனை செய்துள்ளார். மேலும் அங்கு முஷைராவிலும் கலந்து கொண்டார்.
மரியாதைக்குரிய இந்த தர்காவுக்குச் செல்ல வேண்டும் என்று இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான் கோரிக்கை வைத்த நிலையில், அந்த பழைய கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், ராம் சரண் இந்த தர்காவில் பிரார்த்தனை செய்துள்ளார். ராம்சரண் பிரார்த்தனை செய்தது தொடர்பான வீடியோக்கள், தனது காரின் சன்ரூஃபில் இருந்து ரசிகர்களை அவர் பார்த்ததும், மாலைகள் மற்றும் மலர் இதழ்கள் அவர் மீது பொழிந்தது தொடர்பான காட்சிகள் இணையத்தில் வெளியாகியுள்ளது.
ஸ்ரீ விஜய துர்கா தேவி கோவிலில் ராம் சரண் பூஜை செய்யும் கிளிப்களும் வைரலாகி வருகின்றன. காட்சிகளில், ராம் சரண் கோவில் வளாகத்தில் கூட்டத்தை நிர்வகிக்க அவரது மெய்க்காவலர்கள் பாதுகாப்புடன் சடங்குகளில் ஈடுபட்டார். தொடர்ந்து தனது ஆர்.சி.16 படத்தின் ஸ்கிரிப்டை அம்மன் காலடியில் வைத்து பூஜை செய்தார். ராம் சரண் வருகையை அறிந்த ரசிகர்கள் அங்கு பெரும் திரளாக கூடியதால், தெருக்களில் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், அவரது வாகனத்தை நோக்கி ரசிகர்கள் விரைந்து சென்றதால், நிலைமையைக் கட்டுப்படுத்த காவல்துறையினரை லத்தி சார்ஜ் செய்யத் வேண்டிய நிலை ஏற்பட்டது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“