கடலில் நடந்து ராமர் பாலத்தை காப்பாற்றும் அக்‌ஷய்: 'ராம் சேது' ட்ரெய்லர் வெளியீடு

அக்‌ஷய் குமார் நடிக்கும் 'ராம் சேது' படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.

அக்‌ஷய் குமார் நடிக்கும் 'ராம் சேது' படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
கடலில் நடந்து ராமர் பாலத்தை காப்பாற்றும் அக்‌ஷய்: 'ராம் சேது' ட்ரெய்லர் வெளியீடு

அக்‌ஷய் குமார் நடிக்கும் ராம் சேது படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. அபிஷேக் சர்மா இயக்கியுள்ள இப்படத்தில் ஜாக்குலின் பெர்னாண்டஸ், நுஷ்ரத் பருச்சா, நாசர், பிரவேஷ் ராணா, ஜெனிபர் பிசினாடோ ஆகியோர் நடித்துள்ளனர். அமேசான் பிரைம் வீடியோ, அபுண்டன்டியா என்டர்டெயின்மென்ட் மற்றும் லைகா புரொடக்ஷன்ஸ் ஆகியவற்றுடன் இணைந்து கேப் ஆஃப் குட் பிலிம்ஸ் இணைந்து தயாரித்துள்ளது.

Advertisment

ஆக்‌ஷன் படமாக தயாராகியுள்ள இப்படம், புராண இதிகாசமான ராமாயணத்தில் ராமரால் கட்டப்பட்ட பாலத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. பாலத்திற்கு ஏற்படும் ஆபத்தை அக்‌ஷய்
காப்பாற்றுவது போல் படம் உருவாகியுள்ளது. நாத்திகர்-தொல்பொருள் ஆராய்ச்சியாளராக அக்‌ஷய் நடிக்கிறார். படம் ஆக்‌ஷன் அட்வென்ச்சர் நிறைந்தது என்று கூறப்படுகிறது.

&t=119s

படத்தின் ட்ரெய்லரில் அக்‌ஷய் ராமர் பாலத்தை ஒன்றை கையால் தூக்கி வருவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளது. தமிழ், இந்தி மொழிகளில் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. அக்டோபர் 25ஆம் தேதி படம் திரையரங்குகளில் வெளியாகிறது. அஜய் தேவ்கனின் தேங்க் காட் படத்துடன் ராம் சேது படம் வெளியாகிறது. இந்தாண்டு அக்‌ஷய் குமார் நடித்து வெளியான படங்கள் பெரிய அளவில் வரவேற்பு பெறவில்லை. பாக்ஸ் ஆபிஸில் ஹிட் ஆக வில்லை. அவர் நடித்த ரக்ஷா பந்தன் படமும் வரவேற்பு பெறவில்லை. இந்நிலையில் ராம் சேது படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

Advertisment
Advertisements

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: