கார் விபத்தில் காயமடைந்த நடிகை ரம்பா- குழந்தைகள்; மகளுக்காக பிரார்த்தனை செய்ய ரசிகர்களிடம் வேண்டுகோள்
கனடாவில் நடந்த கார் விபத்தில் நடிகை ரம்பா சிறு காயங்களுடன் தப்பினார், ஆனால் அவரது இளைய மகள் சாஷா மருத்துவமனையில் உள்ளார். அவருக்காக பிரார்த்தனை செய்ய ரசிகர்களிடம் ரம்பா வேண்டுகோள்
கனடாவில் நடந்த கார் விபத்தில் நடிகை ரம்பா சிறு காயங்களுடன் தப்பினார், ஆனால் அவரது இளைய மகள் சாஷா மருத்துவமனையில் உள்ளார். அவருக்காக பிரார்த்தனை செய்ய ரசிகர்களிடம் ரம்பா வேண்டுகோள்
சமீபத்தில் கனடாவில் உள்ள தனது குழந்தைகளை பள்ளியில் இருந்து அழைத்துக்கொண்டு வீடு திரும்பிய நடிகை ரம்பா கார் விபத்தில் சிக்கினார். இந்த விபத்தில் அனைவரும் சிறு காயங்களுடன் தப்பிய போதிலும், அவரது இளைய மகள் சாஷா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நடிகை ரம்பா இந்த விபத்து குறித்து இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து கொண்டார், மேலும் தனது மகளுக்காக பிரார்த்தனை செய்யும்படி தனது ரசிகர்களைக் கேட்டுக் கொண்டார்.
Advertisment
ஒரு சந்திப்பில் மற்றொரு கார் மோதியதால் சேதமடைந்த தனது காரை நடிகை ரம்பா சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், மருத்துவமனை படுக்கையில் இருக்கும் தனது மகளின் படத்தையும் ரம்பா பகிர்ந்துள்ளார். படங்களைப் பகிர்ந்துகொண்டு, “பள்ளியிலிருந்து குழந்தைகளை அழைத்துக்கொண்டு திரும்பும் வழியில் எங்கள் கார் மற்றொரு கார் மீது மோதியது! குழந்தைகளுடன் நான் மற்றும் எங்கள் ஆயா காரில் பயணித்தோம், "நாங்கள் அனைவரும் சிறு காயங்களுடன் பாதுகாப்பாக இருக்கிறோம். என் குட்டி சாஷா இன்னும் மருத்துவமனையில் இருக்கிறார், மோசமான நாட்கள் கெட்ட நேரம், தயவுசெய்து எங்களுக்காக வேண்டிக் கொள்ளுங்கள், உங்கள் வேண்டுதல் எங்களுக்கு மிகவும் முக்கியம்”, என ரம்பா பதிவிட்டுள்ளார்.
விபத்து குறித்து ரம்பா தெரிவித்ததும், நடிகை ஸ்ரீதேவி விஜய்குமார் தனது ஆறுதலை அனுப்பினார். “ஓ மை கடவுளே... நீங்கள் பாதுகாப்பாக இருப்பது மகிழ்ச்சி.. பார்த்துக்கொள்ளுங்கள் ரம்பா.. பிரார்த்தனைகளையும் அன்பையும் அனுப்புகிறேன்.” என நடிகை ஸ்ரீதேவி விஜய்குமார் பதிவிட்டுள்ளார். “என் கடவுளே. தயவு செய்து கவனித்துக்கொள். அன்பும் பிரார்த்தனைகளும்,” என நடிகர் விகாஸ் கலந்த்ரி பதிவிட்டுள்ளார்.
90களில் பிஸியாக இருந்த இந்திய சினிமாவின் பிரபலமான முகங்களில் ரம்பாவும் ஒருவர். விஜயலட்சுமி என்ற இயற்பெயரைக் கொண்ட ரம்பா ரஜினிகாந்த், அஜித், விஜய், சல்மான் கான், சிரஞ்சீவி மற்றும் மம்முட்டி உள்ளிட்ட இந்தியாவின் முன்னணி நட்சத்திரங்களுடன் நடித்துள்ளார்.
கனடாவைச் சேர்ந்த தொழிலதிபர் இந்திரன் பத்மநாதனை திருமணம் செய்த பின்னர் 2010 இல் நடிப்பதை விட்டுவிட்டு டொராண்டோவுக்குச் சென்றார். அவருக்கு மூன்று குழந்தைகள், அதாவது இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil