தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல்வேறு மொழிகளில் நடித்தவர் நடிகை ரம்பா. திருமணத்திற்குப் பிறகு படங்களில் நடிப்பதை நிறுத்திக் கொண்டார். ரம்பா தற்போது கனடாவில் கணவர் மற்றும் குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.
இந்நிலையில் கனடாவில், ரம்பா குழந்தைகளுடன் பள்ளியில் இருந்து வீடு திரும்பும்போது அவரது கார் எதிரே வந்த மற்றொரு காரின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் அவரும் மூத்த மகளும் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்கள்.
இதுகுறித்து ரம்பா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ‘பள்ளியிலிருந்து குழந்தைகளை அழைத்து வரும்போது நடந்த கார் விபத்தில் குழந்தைகளுடன் நான் உயிர் தப்பினேன். நாங்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்கிறோம். இளைய மகள் சாஷா இன்னும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறியிருந்தார்.
குழந்தை இப்போது பத்திரமாக வீடு திரும்பியுள்ள நிலையில், ரம்பா தனது குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக வார விடுமுறையை கொண்டாடும் வீடியோக்களை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அதில் ரம்பாவின் மகன் விஜய்யின் அரபிக்குத்து பாடலுக்கு துள்ளி துள்ளி டான்ஸ் ஆடுகிறான்.
அந்த வீடியோவை பகிர்ந்த ரம்பா, “ஹபீபி… என் வீட்டில் தொடங்கியது. இந்த வார இறுதியில் குழந்தைகள் மீண்டும் ஃபார்முக்கு வந்தார்கள். அவர்களை இயல்பு நிலைக்கு கொண்டு வர என்னால் முடிந்தவரை முயற்சி செய்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
ரம்பா தனது குழந்தைகளுடன் இருக்கும் சமீபத்திய வீடியோ:
ரம்பா தனது குழந்தைகளுடன் இருக்கும் வீடியோ
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“