'உள்ளத்தை அள்ளித்தா' முதல் ஹீரோயின் இவங்க தான்; படம் பெரிய ஹிட்டுனு எனக்கே சொல்லல: ரம்பா ஓபன் டாக்!

உள்ளைத்தை அள்ளித்த படத்தின் பல அனுபவங்கள் குறித்தும் இதுவரை யாருக்கும் தெரியாத சில சுவாரசியமான தகவல்களையும் நடிகை ரம்பா பகிர்ந்துள்ளார்.

உள்ளைத்தை அள்ளித்த படத்தின் பல அனுபவங்கள் குறித்தும் இதுவரை யாருக்கும் தெரியாத சில சுவாரசியமான தகவல்களையும் நடிகை ரம்பா பகிர்ந்துள்ளார்.

author-image
WebDesk
New Update
ullathai allitha rambha

புகைப்படம்: அவள் விகடன்

தொண்ணூறுகளின் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஒரு பொக்கிஷமான திரைப்படமாக இன்றும் இருப்பது, நடிகை ரம்பாவின் திரை வாழ்வில் ஒரு முக்கியமான மைல்கல்லான 'உள்ளத்தை அள்ளித்தா'. படத்தைப்போலவே இதில் இடம்பெற்ற பாடல்களும் இன்னும் ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் நடிகை ரம்பா அவள் விகடனுக்கு அளித்த பேட்டி ஒன்றில் இந்தப் படம் தனது வாழ்க்கையில் ஏற்படுத்திய தாக்கம் குறித்தும், பல அறியப்படாத சுவாரஸ்யமான தகவல்களையும் பகிர்ந்து கொண்டார். 

Advertisment

'உள்ளத்தை அள்ளித்தா' திரைப்படம் 1996 ஆம் ஆண்டு ஜனவரி 15 அன்று வெளியானது. சுந்தர் சி. இயக்கிய இந்தப் படத்தில் கார்த்திக், ரம்பா மற்றும் கவுண்டமணி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். ரம்பா இந்தப் படத்தின் வெற்றியைப் பற்றிப் பேசும்போது, படம் வெளியான முதல் இரண்டு வாரங்களுக்கு அதன் வெற்றி குறித்து தனக்குத் தெரியவில்லை என்று கூறியுள்ளார். "படம் சாதாரணமாக ஓடுகிறது" என்று மட்டுமே அவரிடம் கூறப்பட்டதாம். இதனால், தன் தமிழ் சினிமா வாழ்க்கை முடிந்துவிட்டதாக அவர் மிகுந்த வருத்தத்தில் இருந்திருக்கிறார்.

ஆனால், படத்தின் வெற்றி எதிர்பாராவிதமாக அமைந்தது. ஒருமுறை அவர் விமான நிலையத்திற்குச் சென்றபோது, அங்கே ஏராளமான ரசிகர்கள் தன்னை வாழ்த்தக் குவிந்திருப்பதைப் பார்த்து வியப்படைந்தார். அப்போதுதான், படம் மிகப்பெரிய வெற்றிப் படமாக மாறியதை அவர் மக்களிடமிருந்து முதன்முறையாக அறிந்து கொண்டார். மேலும், ரம்பா மற்றொரு சுவாரஸ்யமான தகவலையும் வெளியிட்டார். 'உள்ளத்தை அள்ளித்தா' படத்துக்காக முதலில் நடிகை நக்மாவைத்தான் ஒப்பந்தம் செய்ய திட்டமிட்டதாக இயக்குனர் சுந்தர் சி. ஒரு பேட்டியில் கூறியதாக ரம்பா தெரிவித்தார். இந்த தகவல் ரசிகர்களுக்குப் புதியதாகவும் ஆச்சரியமாகவும் அமைந்துள்ளது.

nagma

Advertisment
Advertisements

இந்தப் படத்தின் வெற்றி ரம்பாவின் வாழ்க்கையில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கியது. இந்த படம் அவரை தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக நிலைநிறுத்தியதோடு, ரசிகர்களின் மனதிலும் நீங்கா இடத்தைப் பிடிக்க உதவியது. இந்தத் திரைப்படம் ரம்பாவின் வாழ்க்கையில் ஒரு பெரிய திருப்புமுனையாக அமைந்தது. ஏற்கெனவே தெலுங்கு திரையுலகில் பிரபலமானிருந்த ரம்பாவை, 'உள்ளத்தை அள்ளித்தா' படம் தமிழ் ரசிகர்களிடமும் கொண்டு சேர்த்தது. இதனால், அவர் எங்கு சென்றாலும் ரசிகர்கள் அவரை "ரம்பா, ரம்பா" என்று அடையாளம் கண்டுகொள்ளத் தொடங்கினர்.

rambha

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: