scorecardresearch

இந்திய சினிமாவின் உச்ச நட்சத்திரத்துக்கு ஜோடியாகும் ரம்யா கிருஷ்ணன்

இவர் கடந்தவாரம் வெளியான ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தில் லீலா என்ற கதாபாத்திரத்தில் நடித்து, ரசிகர்களின் பாராட்டைப் பெற்றார். 

Ramya Krishnan reunites with Amitabh Bachchan
Ramya Krishnan reunites with Amitabh Bachchan

அம்மன் தோற்றத்தில் சாமியாக மிரட்டியும், வில்லி கதாபாத்திரத்தில் நீலாம்பரியாக விரட்டியும் நடிப்பில் வெரைட்டி காட்டுபவர் நடிகை ரம்யா கிருஷ்ணன்.

இவர் கடந்தவாரம் வெளியான ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தில் லீலா என்ற கதாபாத்திரத்தில் நடித்து, ரசிகர்களின் பாராட்டைப் பெற்றார்.

ரஜினி முன் குரலை உயர்த்திப் பேசும் வில்லியாக படையப்பாவில் மிரட்டிய இவர், கமல் மேல் காதல் கொள்பவராக பஞ்சதந்திரத்தில் நடித்திருந்தார்.

பாகுபலி மற்றும் பாகுபலி 2 படங்களுக்குப் பிறகு, ராஜமாதா-வாக ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படுகிறார். இவர் தற்போது இந்தியாவின் உச்ச நட்சத்திரம் அமிதாப் பச்சனுக்கு ஜோடியாக நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன.

ஆம்! இயக்குநர் தமிழ்வாணன் இயக்கத்தில், நடிகர்கள் அமிதாப் பச்சன், எஸ்.ஜே.சூர்யா இருவரும் இணைந்து நடித்து வரும் திரைப்படம் உயர்ந்த மனிதன். இதில் தான், அமிதாப்புக்கு ஜோடியாகிறாராம் ரம்யா கிருஷ்ணன்.

இதற்கு முன் 1998-ல் வெளியான ’பேடே மியான் சோட்டே மியான்’ என்ற படத்தில் அமிதாப் பச்சன் – ரம்யா கிருஷ்ணன் ஜோடியாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

 

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Ramya krishanan reunites with amitabh bachchan

Best of Express