Advertisment

ரோஜா ஆபாச பட நடிகையா? வீடியோவில் கொந்தளித்த ரம்யா கிருஷ்ணன், மீனா

ரோஜா ஆபாச பட நடிகை என தெலுங்கு தேசம் கட்சி தலைவர் விமர்சனம்; நடிகைகள் ரம்யா கிருஷ்ணன் மற்றும் மீனா வீடியோவில் கண்டனம்

author-image
WebDesk
New Update
Ramya Krishan Roja Meena

ரோஜா ஆபாச பட நடிகை என தெலுங்கு தேசம் கட்சி தலைவர் விமர்சனம்; நடிகைகள் ரம்யா கிருஷ்ணன் மற்றும் மீனா வீடியோவில் கண்டனம்

நடிகை ரோஜா ஆபாச படத்தில் நடித்தவர் என தெலுங்கு சேதம் கட்சியின் நிர்வாகியும் முன்னாள் அமைச்சருமான பண்டாரு சத்யநாராயண ராவ் விமர்சித்ததற்கு நடிகைகள் ரம்யா கிருஷ்ணன் மற்றும் மீனா கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Advertisment

கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஆந்திர முன்னாள் முதல்வரும் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டார். அவரது கைதை நடிகையும் ஆந்திர மாநில சுற்றுலாத் துறை அமைச்சருமான ரோஜா, தொண்டர்களுடன் சேர்ந்து பட்டாசு வெடித்துக் கொண்டாடினார்.

இந்தநிலையில், நடிகை ரோஜா ஆபாச படத்தில் நடித்தவர் என ஆந்திர முன்னாள் அமைச்சரும் தெலுங்கு தேசம் கட்சியின் நிர்வாகியுமான பண்டாரு சத்யநாராயண ராவ் விமர்சித்திருந்தார். மேலும், நடிகை ரோஜா நடித்ததாக ஒரு வீடியோவையும் சட்டசபையில் பண்டாரு காட்டியுள்ளார். இதற்கு பெண் அமைப்புகளும் சமூக ஆர்வலர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இதனையடுத்து, நடிகை ரோஜாவும் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு பேட்டி கொடுத்திருந்தார். அந்த பேட்டியில் நான் ஆபாச படத்தில் நடித்தவள் என்கிறார்கள். ஒரு வீடியோவையும் சட்டசபையில் காட்டினார்கள். ஆனால் அதில் நடித்தது நான்தான் என்பதற்கான எந்த ஆதாரத்தையும் அவர்கள் காண்பிக்கவில்லை. பண்டாரு அவர் வீட்டு பெண்களை இப்படி கேவலப்படுத்தினால் சும்மா இருப்பாரா? அவர் கூறியதை நாரா லோகேஷும் சந்திரபாபு நாயுடுவும் கண்டிக்கவே இல்லை.

வெட்கமே இல்லாமல் பண்டாரு கூறிய கருத்துகளுக்கு ஆதரவாக கமென்ட் போடுகிறார் லோகேஷ். இப்படி செய்தால் பெண்கள் எப்படி அரசியலுக்கு வருவார்கள்? இதையெல்லாம் யோசிக்கவே மாட்டீர்களா, நான் தவறானவள் என்றால் என்னை ஏன் உங்கள் கட்சியில் சேர்த்தீர்கள், பிரச்சாரம் செய்ய வைத்தீர்கள், என கேட்டு ரோஜா அந்த பிரஸ்மீட்டில் கண்ணீர் விட்டு அழுதார்.

அதேநேரம் தெலுங்கு தேசம் கட்சியின் மகளிரணி தலைவி அனிதா, இது டிரைலர்தான் ரோஜாவின் முழு ஆபாச படத்தை விரைவில் வெளியிடுவோம் என கூறியுள்ளார்.

இந்தநிலையில், நடிகை ரோஜாவுக்கு ஆதரவாக பல்வேறு தரப்பில் இருந்தும் குரல்கள் வந்துக் கொண்டிருக்கின்றன. திரைதுறையில் இருந்து முதலில் நடிகை ராதிகா குரல் கொடுத்தார்.

இந்தநிலையில் நடிகை ரம்யா கிருஷ்ணன் நடிகை ரோஜாவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ரம்யா கிருஷ்ணன் வெளியிட்டுள்ள வீடியோவில், முன்னாள் அமைச்சர் பண்டாரு சத்யநாராயணன் ரோஜா குறித்து பேசியது கண்டிக்கத்தக்கது. ரோஜாவை பற்றி இப்படி வரும் விமர்சனம் ஒரு தோழியாகவும் ஒரு பெண்ணாகவும் என்னை மிகவும் காயப்படுத்தியுள்ளது. உலகப் பொருளாதாரத்தில் இந்தியா 5 ஆவது இடத்தில் உள்ளது. இந்த நிலையில் நமது நாட்டில் பெண்ணியம் இப்படித்தான் பிரதிபலிக்கிறதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இந்த நாட்டின் பெண்களால் எவ்வளவுதான் தாங்க முடியும். பாலியல் வன்கொடுமை, பெண் சிசுக் கொலை என பல பிரச்சினைகளை அனுபவிக்கிறோம். பண்டாருவின் மோசமான விமர்சனம் ரோஜாவை அவருடைய குடும்பத்தையும் குறி வைத்தது போல் உள்ளது. இதை பொறுத்துக் கொள்ள முடியாது. பெண்களுக்கு எதிராக வன்முறைகளுக்கு பெண்களும் ஆண்களும் இணைந்து குரல் கொடுக்க வேண்டும். எனவே பண்டாரு விவகாரத்தில் பிரதமர் மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒரு பெண்ணை இப்படி கீழ்த்தரமாக பேசியவரை ஒரு போதும் மன்னிக்கவே கூடாது, என ரம்யா கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

அடுத்ததாக நடிகை மீனாவும் ரோஜாவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார். நடிகை மீனா வெளியிட்டுள்ள வீடியோவில், எல்லோருக்கும் வணக்கம்! பண்டாரு சத்யநாராயண ராவ், நடிகை ரோஜா ஆபாச படத்தில் நடித்தவர் என கூறியிருந்த வீடியோவை நான் பார்த்தேன். ரொம்ப கஷ்டமாக இருந்தது. அதே சமயம் ரொம்ப கோபமாகவும் இருந்தது. காலம் மாறிவிட்டது. பெண்கள் வலிமையுடையவர்கள் ஆகிவிட்டனர். பெண்கள் முன்னேற்றமும் வளர்ச்சி அடைந்துவிட்டது. இதெல்லாம் தெரியாம எத்தனை மோசமாக பேசியிருக்கீங்க நீங்க.

இது ஒரு பெண்ணின் நடத்தையை மோசமாக விமர்சிப்பது. நீங்கள் ரோஜா மீது பொறாமையில் இருப்பதையே காட்டுகிறது. பாதுகாப்பின்மையில் இருப்பதை நீங்கள் உணர்வதாகவே காட்டுகிறது. அது மட்டுமல்லாமல் பெண்கள் எத்தனை மோசமான மனநிலையில் இருக்கிறீர்கள் என்று காட்டுகிறது. எப்படி ரோஜா குறித்து பொதுவெளியில் மோசமான கருத்தை சொன்னீர்களோ அதே போல் பொதுவெளியில் நீங்கள் (பண்டாரு) மன்னிப்பு கேட்க வேண்டும்.

ரோஜா சினிமா துறைக்கு வந்த போதிலிருந்தே எனக்கு அவரை தெரியும். ரோஜாவை ஒரு நடிகையாக. ஒரு பெண்ணாக, ஒரு அரசியல்வாதியாக ஒரு தாயாக ஒரு தோழியாக எனக்கு அவரை நன்றாகவே தெரியும். அப்போது முதல் இப்போது வரை ரோஜா எத்தனை கடும் உழைப்பாளி என்பது எனக்கு தெரியும். ரோஜா தான் கால் வைத்த சினிமா துறை, அரசியலிலும் குழந்தை வளர்ப்பிலும் ஒரு தாயாகவும் வெற்றி அடைந்துவிட்டார். அமைச்சர் ரோஜாவின் கேரக்டரை மோசமாக விமர்சிக்க பண்டாருக்கு யார் அதிகாரம் கொடுத்தது? நீங்கள் இப்படி ஒரு பெண்ணின் கேரக்டரை மோசமாக பேசிவிட்டால் பெண்கள் எல்லாம் பயந்து போய்விடுவார்கள் என நினைக்கிறீர்களா? நான் ரோஜாவின் போராட்டத்திற்கு ஆதரவு தருகிறேன், என மீனா கடுமையாக பேசியுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Meena Ramya Krishnan Roja
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment