scorecardresearch

முன்னணி நடிகைகளுக்கே ’ஹெவி டஃப்’ கொடுக்கும் ரம்யா கிருஷ்ணனின் அசத்தல் படங்கள்!

‘பாகுபலி’ படத்தில் ராஜமாதாவாக நடித்து மீண்டும் ரசிகர்களை வாயடைக்க வைத்தார். 

முன்னணி நடிகைகளுக்கே ’ஹெவி டஃப்’ கொடுக்கும் ரம்யா கிருஷ்ணனின் அசத்தல் படங்கள்!
Ramya Krishnan Latest Photos

Ramya Krishnan Latest Photoshoot: நடிகை ரம்யா கிருஷ்ணன் 90-களில் ரஜினி உட்பட பல நடிகர்களுடன் இணைந்து நிறையப் படங்களில் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என பல மொழிகளிலும் நடித்திருக்கிறார். இதுவரை 200 திரைப்படங்களுக்கு மேல் நடித்துள்ள ரம்யா கிருஷ்ணன், ஃபிலிம் ஃபேர் அவார்ட் தமிழ்நாடு ஸ்டேட் பிலிம் அவார்டு என நிறைய விருதுகளையும் வாங்கியுள்ளார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் ’படையப்பா’ திரைப்படத்தில் நீலாம்பரி என்ற வில்லி கதாபாத்திரத்தில் நடித்து ஒட்டு மொத்த ரசிகர்களையும் கவர்ந்தார். தமிழ் சினிமாவின் முக்கிய வில்லி கதாபாத்திரங்களில், எத்தனை காலம் கடந்தாலும் நீலாம்பரி கதாபாத்திரத்திற்கும் முக்கிய இடமுண்டு. இதனைத் தொடர்ந்து ‘பாகுபலி’ படத்தில் ராஜமாதாவாக நடித்து மீண்டும் ரசிகர்களை வாயடைக்க வைத்தார்.

Ramya Krishnan Latest Photos
முத்துப்பல் சிரிப்புடன்..
Ramya Krishnan Latest Photos
மெல்லிய புன்னகை…
Ramya Krishnan Latest Photos
ராஜ தோரணையில் ராஜமாதா…
Ramya Krishnan Latest Photos
இதுதான் நேர்க்கொண்ட பார்வையோ….
Ramya Krishnan Latest Photos
வயசானாலும் அழகும் ஸ்டைலும்….
Ramya Krishnan Latest Photos
முன்னணி நடிகைகளுக்கே ‘டஃப்’ கொடுக்கும் ரம்யா கிருஷ்ணன்…
Ramya Krishnan Latest Photos
என்றும் இளமை ரம்யா…

இயக்குநர் கெளதம் மேனன் மறைந்த ஜெயலலிதாவின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து ‘குயின்’ என்ற வெப் சிரீஸை இயக்கி வருகிறார். அதில் ஜெயலலிதாவாக ரம்யா கிருஷ்ணன் நடித்து வருகிறார். இதன் டீசரும், ட்ரைலரும் சில தினங்களுக்கு முன்னர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Ramya krishnan latest photos queen web series

Best of Express