Advertisment

காவாலா பாட்டுக்கு ஆட்டம்: இணையத்தை அதிரவிட்ட 52 வயது ரம்யா கிருஷ்ணன்

ரம்யா கிருஷ்ணன் 52 வயதில், ரஜினியின் ‘ஜெயிலர்’ படத்தில் தமன்னா டான்ஸ் ஆடிய ‘காவாலா’ பாடலுக்கு டான்ஸ் ஆடி இணையத்தை அதிர விட்டிருக்கிறார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Jailer movie Kaavaalaa dance, Kaavaalaa dance, Kaavaalaa song, Ramya Krishnan, Ramya Krishnan Kaavaalaa dance, Tamannaah, Tamannaah Bhatia, காவாலா பாட்டுக்கு ரம்யா கிருஷ்ணன் ஆட்டம், இணையத்தை அதிரவிட்ட 52 வயது ரம்யா கிருஷ்ணன், காவாலா டான்ஸ், ஜெயிலர், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், Ramya Krishnan mass dance to kaavaalaa song video goes viral

ரம்யாகிருஷ்ணன் காவாலா பாடலுக்கு டான்ஸ்

இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் ‘ஜெயிலர்’ படத்தில் தமன்னாவின் கலக்கல் டான்ஸ் உடன் வெளியான ‘காவாலா’ பாடல் வீடியோ இப்போது வரை ஓயாத கடல் அலை போல வைரலாகி கொண்டே இருக்கிறது.

Advertisment

ஜெயிலர் படத்தில் இருந்து தனித்தனியாக வெளியிடப்பட்ட காவாலா மற்றும் ஹுகூம் ஆகிய 2 பாடல்களும் பட்டையைக் கிளப்பி வருகின்றன.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் ‘ஜெயிலர்’ படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இதில், நடிகை தமன்னா டான்ஸ் ஆடியுள்ள ‘காவாலா’ பாடல் இணையத்தையும் சமூக ஊடகங்களையும் திணறடித்துள்ளது. தமன்னாவின் டான்ஸால் மயங்கிப்போன சாமனியர்கள் முதல் பிரபலங்கள் வரை பலரும் ‘காவாலா’ பாடலுக்கு டான்ஸ் போட்டு ரீல்ஸ் செய்து கலக்கி வருகின்றனர்.

ஆர்ட்டிஃபிசியல் இண்டெலிஜென்ஸ் நிபுணர்கள் இன்னொரு பக்கம், தமன்னா ஆடிய டான்ஸ்க்கு சிம்ரன், காஜல் அகர்வால் உள்ளிட்ட முன்னணி நடிகைகள் ஆர்ட்டிஃபிசியல் இண்டெலிஜென்ஸ் தொழில்நுட்பம் போல ஆட்டம் போட வைத்து லைக்குகளை ஒட்டுமொத்தமாக அள்ளிக்கொண்டு வைரலை விலைக்கு வாங்கிவிட்டார்கள். அந்த அளவுக்கு காவாலா பாடல் கொடி கட்டிப் பறக்கிறது.

இந்நிலையில், தமிழ் சினிமாவின் பிரபல நடிகை ரம்யாகிருஷ்ணன் ‘காவாலா’ பாடலுக்கு டான்ஸ் ஆடிய வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. 52 வயதாகும் ரம்யா கிருஷ்ணன், காவலா பாடலுக்கு டான்ஸ் ஆடி இணையத்தை அதிர விட்டிருக்கிறார்.

ரம்யா கிருஷ்ணன் எத்தனையோ படங்களில் நடித்து இருந்தாலும், இப்போதும் ரம்யா கிருஷ்ணன் என்றாலே ரஜினிகாந்த்தின் படையப்பா படத்தில் கலக்கிய நீலாம்பரி கதாபாத்திரம்தான் நினைவுக்கு வரும். காக்க படத்தில் ‘தூது வருமா தூது வருமா’ பாடலுக்கும் சிம்பு ‘கண்ணம்மா கண்ணம்மா மீனு வாங்கப் போலாமா?’ என்ற பாடலுக்கும் ரம்யா கிருஷ்ணன் ஆடிய டான்ஸை எப்போதும் ரசிகர்களால் மறக்க முடியாது.

இந்நிலையில், ரம்யாகிருஷ்ணன் ‘காவாலா’ பாடலுக்கு க்யூட்டாக டான்ஸ் ஆடிய வீடியோ வெளியாகி இருக்கிறது. ரம்யா கிருஷ்ணன் 52 வயதில் ரஜினியின் ‘ஜெயிலர்’ படத்தில் தமன்னா ஆடிய டான்ஸ் ‘காவாலா’ பாடலுக்கு டான்ஸ் ஆடி இணையத்தை அதிர விட்டிருக்கிறார்.

இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள், ரம்யா கிருஷ்ணனுக்கு 52 வயது என்று சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள். என்னமா டான்ஸ் ஆடுகிறார் என்று வியப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Ramya Krishnan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment