மலையாள சூப்பர் ஸ்டாருடன் அடுத்த படம்… மகிழ்ச்சியில் ரம்யா பாண்டியன்

Ramya pandian joins Mammootty movie photo goes viral: மம்முட்டி படத்தில் நடிக்கும் ரம்யா பாண்டியன்; சூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள்

குக் வித் கோமாளி பிரபலம் நடிகை ரம்யா பாண்டியன் தனது அடுத்த படவாய்ப்பு குறித்த தகவலை மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் ஜோக்கர் திரைப்படம் மூலம் அறிமுகமானவர் ரம்யா பாண்டியன். பின்னர் ஆண் தேவதை படத்தில் இயக்குனர் சமுத்திரக்கனிக்கு ஜோடியாக நடித்தார். பின்னர் விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டதன் மூலம் பிரபலமானார். தொடர்ந்து கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் நடுவராக இருந்த ரம்யா பாண்டியன், பின்னர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டார். பிக் பாஸ் சீசன் 4 ல் கலந்துக் கொண்ட ரம்யா, ரன்னர் அப் ஆனார்.

சமீபத்தில், சூர்யா தயாரிப்பில் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியான ‘ராமே ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ரம்யா நடித்திருந்தார். இந்நிலையில் தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய இரண்டு மொழிகளில் உருவாகவுள்ள புதிய படம் ஒன்றில் நடிக்க கமிட்டாகியுள்ளார் ரம்யா. இந்த தகவலை தனது சமூக வலைத்தள பக்கத்தில் ரம்யா தெரிவித்துள்ளார்.

அங்கமாலி டைரிஸ், இ.ம.யூ, ஜல்லிக்கட்டு உள்ளிட்ட ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடம் அதிக வரவேற்பை பெற்ற படங்களை இயக்கிய மலையாள சினிமாவின் இளம் இயக்குனர்களில் முக்கியமானவர் லிஜோ ஜோஸ் பெல்லிசேரி இயக்கும் புதிய படத்தில் ரம்யா நடிக்க உள்ளார். லிஜோ, தமிழ், மலையாளம் என இரு மொழிகளில் மம்முட்டி நடிப்பில் ’நண்பகல் நேரத்து மயக்கம்’ என்ற புதிய படத்தை இயக்குகிறார். இந்த படத்தில் ரம்யா பாண்டியன் நடிக்க உள்ளார்.

மம்முட்டியின் திரைப்பட நிறுவனமான மம்முட்டி கம்பெனி இந்த படத்தை தயாரிக்கிறது. இந்த படத்திற்கு திரைக்கதையை எஸ்.ஹரிஷ் எழுத, ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வர் படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். வேளாங்கன்னியில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது. தற்போது பழனியில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. ஒரே கட்டமாக இந்த படத்தை முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. படத்தின் படப்பிடிப்பில் மம்முட்டி இணைந்துள்ள புகைப்படம் ஏற்கனவே வெளியானது.

நடிகை ரம்யா பாண்டியன் இந்த படத்தின் பழனி படப்பிடிப்பில் சில நாட்களுக்கு முன் இணைந்தார். இந்நிலையில் ரம்யா பாண்டியன் தனது டிவிட்டரில் அதிகாரப்பூர்வமாக இந்த படத்தில் நடிப்பதாக அறிவித்துள்ளார். அந்தப் பதிவில், எனது அடுத்தப்படம் மலையாளத்தில் என்பதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறேன். விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட மற்றும் செல்வாக்கு மிக்க இயக்குனருடன் (லிஜோ ஜோஸ் பெல்லிசரி) பணிபுரியும் வாய்ப்பு கிடைத்துள்ளது. மெகா ஸ்டார் மம்முட்டியுடன் நடிக்கும் கனவு நனவாகியுள்ளது. தேனி ஈஸ்வர் மற்றும் படக்குழுவுக்கு நன்றி என்று பதிவிட்டுள்ளார். மேலும் நடிகர் மம்முட்டி, இயக்குனர் லிஜோ ஜோஸ் பெல்லிசரி, ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வர் ஆகியோருடன் இருக்கும் புகைப்படங்களையும் ரம்யா பகிர்ந்துள்ளார். 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Ramya pandian joins mammootty movie photo goes viral

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com