scorecardresearch

Ranbir Kapoor Sanju movie box office prediction: முதல் நாளில் 30 கோடி வசூலாகும் என எதிர்பார்ப்பு!

Ranbir Kapoor sanju box office prediction: சஞ்சய் தத், ரன்பீர் கபூர், ராஜ்குமார் ஹிராணி, சோனம் கபூர், மனீஷா கொய்ராலா, அனுஷ்கா சர்மா

Ranbir Kapoor Sanju movie box office prediction: முதல் நாளில் 30 கோடி வசூலாகும் என எதிர்பார்ப்பு!
Ranbir Kapoor sanju box office collection: சஞ்சு திரைப்படம் இன்று ரிலீசானது

இந்த வருடத்தில் பாலிவுட் நிறைய சுவாரஸ்யமான படங்களை பார்த்து வருகிறது. பத்மாவத், பேட் மேன், ராஸி, பர்மானு உள்ளிட்ட சில படங்களுக்கு பிறகு, பெரும் எதிர்பார்ப்பில் இருந்த சஞ்சு திரைப்படம் இந்த வாரம் ரிலீசாகி உள்ளது. நடிகர் சஞ்சய் தத்தின் வாழ்க்கை வரலாற்றை கதைக்களமாக எடுத்துள்ள இயக்குனர் ராஜ்குமார் ஹிராணி, நடிகர் ரன்பீர் கபூரை சஞ்சய் தத்தாகவே உருமாற்றி இருக்கிறார். பிளே பாய் இமேஜ் இருந்தாலும், எப்படிப்பட்ட கேரக்டர் கொடுத்தாலும் அசால்ட் செய்யும் ரன்பீர், டிரைலரிலேயே அதகளப்படுத்தி இருந்தார். இதனால், இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் தாறுமாறாக எகிறியுள்ளது.

Follow our Live Updates on Sanju Movie Release in English

ராஜ்குமார் ஹிரானி, ரன்பீர் கபூர் எனும் இரு பெரிய பிராண்ட் இருப்பதால் படம் பல வசூல் சாதனைகளை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Ranbir Kapoor sanju box office prediction: ரன்பீர் கபூர், சோனம் கபூர்

வர்த்தக நிபுணர் கிரிஷ் ஜோஹர் இந்தியன் எக்ஸ்பிரஸிடம் தெரிவித்ததாவது, ‘சஞ்சு திரைப்படம் தொடக்க நாளில் 27-30 கோடி வரை வர்த்தகம் செய்வதற்கான வாய்ப்புகள் உள்ளது. ரிலீசான இன்றைய நாளில் இருந்து அடுத்த மூன்று நாளுக்குள் 100 கோடி கிளப்பில் இப்படம் இணைந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. 4000 திரைகளுக்கும் மேலாக சஞ்சு ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. இதன் அட்வான்ஸ் புக்கிங் ஆரம்பத்தில் சுமாராகவே இருந்தது. ஆனால், வார இறுதியில் பிக்அப் ஆகிவிட்டது. ரன்பீர் நடித்திருப்பதால், அதிகளவிலான இளம் ரசிகர்கள் தியேட்டரை நோக்கி படையெடுப்பார்கள்.

ரன்பீர், தற்போதைய பாலிவுட் சினிமாவில் மிகப்பெரிய நடிகர்களில் ஒருவராக உள்ளார். ராஜ்குமார் ஹிரானியின் இயக்கம், ரன்பீர் கபூரின் நடிப்பு, மற்றும் சஞ்சய் தத்தின் வாழ்க்கை வரலாறு என்பதால் படத்திற்கு பாசிட்டிவான விமர்சனம் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது’ என்றார்.

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Ranbir kapoor sanju box office prediction ranbir kapoor starrer to earn rs 30 crore on day

Best of Express