/indian-express-tamil/media/media_files/b2E8M8hp1YYSvDNg4s4w.jpg)
அப்படி போடு உள்ளிட்ட பாடல்களுக்கு அட்லீ, அதிதி, ரன்வீர் சிங் ஆகியோர் உற்சாகமாக நடனம் ஆடினார்.
Aditi shankar |தமிழ் சினிமாவின் பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யா. இவருக்கும் ரோகித் என்பவருக்கும் திருமணம் ஆன நிலையில் இருவரும் பிரிந்தனர்.
இந்த நிலையில் தருண் கார்த்திகேயன் என்பவருடன் இவருக்கு இரண்டாம் திருமணம் நடந்தது. இந்தத் திருமண விழாவில், பாலிவுட் முதல் கோலிவுட் வரை சினிமா பிரபலங்கள் பலரும் ஷங்கர் மகளின் திருமணத்தில் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர்.
📸| Ranveer Singh at Director Shankar’s daughter wedding last night in Chennai pic.twitter.com/xEESSPgtYn
— Ranveer Singh TBT (@Ranveertbt) April 16, 2024
விழாவில் இயக்குனர் ஷங்கரிடம் பணிபுரிந்த இயக்குனரான அட்லீ கலந்துகொண்டார். அப்போது அவர், விஜய்யின் அப்படி போடு பாடலுக்கு நடனம் ஆடினார்.
அவருடன் அதிதி ஷங்கரும் ஆட்டம் போட்டார். கூடவே, பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கும் கில்லி பட பாடலின் ஸ்டெப்ஸ்களை சரியாக போட்டு நடனமாடினார். மேலும் விஜய்யின் மற்றொரு பாடலான வாத்தி கம்மிங் பாடலுக்கும் நடனம் ஆடினார்கள்.
Bollywood Actor #RanveerSingh Dancing #AppadiPodu Song 🕺🏻🔥#Ghilli | #GhilliReRelease#TheGreatestOfAllTime
— Tharani ᖇᵗк (@iam_Tharani) April 16, 2024
pic.twitter.com/DputM3Hc1Q
இந்த வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகிவருகின்றன. இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில், ஜூன் மாதம் கமல்ஹாசனை வைத்து இயக்கியுள்ள இந்தியன் 2 திரைப்படம் வெளியாக உள்ளது.
ஈஸ்வரி என்பவரை திருமணம் செய்து கொண்ட ஷங்கருக்கு ஐஸ்வர்யா, அதிதி மற்றும் அர்ஜித் என மூன்று குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.