/tamil-ie/media/media_files/uploads/2018/10/Deepika-Padukone-And-Ranveer-Singh-Hd-Wallpaper3.jpg)
Ranveer Singh Deepika Padukone wedding date : பாலிவுட் திரையுலகமே எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த ஒரு திருமண நிகழ்வு இவர்களுடையது தான். பாலிவுட் திரையுலகின் செல்ல காதலர்கள் தீபிகா படுகோன் மற்றும் ரன்வீர் சிங் இருவரும் பல வருடங்களாக காதலித்து வருகிறார்கள்.
அடிக்கடி வெளிநாடுகளுக்கு டேட்டிங் செல்வது மற்றும் இருவரும் இணைந்து பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சிகளுக்கு பேட்டி தருவது, இருவரும் ஒன்றாக இணைந்து படம் நடிப்பது என செம்ம பிஸியாக இருந்தார்கள்.
Ranveer Singh Deepika Padukone wedding date
இப்போது திருமணம் செய்து கொள்வார்கள், அப்போது திருமணம் செய்து கொள்வார்கள் என அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்க வருகின்ற நவம்பர் 14 மற்றும் 15ம் தேதிகளில் தங்களின் திருமண நிகழ்வு நடக்க இருப்பதாக ரன்வீர் சிங் மற்றும் தீபிகா படுகோன் தங்களின் சமூக வலைதளங்களில் கல்யாண பத்திரிக்கையினை பதிவிட்டிருக்கிறார்கள்.
— Deepika Padukone (@deepikapadukone) 21 October 2018
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.