”அவளிடம் வேறு என்ன கேட்க முடியும்?” தீபிகா படுகோனை வெட்கப்பட வைத்த ரன்வீர் சிங்

தீபிகா 2013-ஆம் ஆண்டு தான் நடித்த ’சென்னை எக்ஸ்பிரஸ்’ படத்திற்காக சிறந்த நடிகைக்கான சிறப்பு விருதை ஐஃபாவில் வென்றார்.

தீபிகா 2013-ஆம் ஆண்டு தான் நடித்த ’சென்னை எக்ஸ்பிரஸ்’ படத்திற்காக சிறந்த நடிகைக்கான சிறப்பு விருதை ஐஃபாவில் வென்றார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Deepika Padukone Ranveer Singh IIFA 2019

Deepika Padukone Ranveer Singh IIFA 2019

Ranveer Singh Deepika Padukone: பாலிவுட்டின் நட்சத்திர தம்பதியான ரன்வீர் சிங் மற்றும் தீபிகா படுகோன் நடந்து முடிந்த ஐஃபா விருதுகள் 2019-ல் மீண்டும் ரசிகர்களின் இதயங்களை வென்றனர்.

Advertisment

 

publive-image

அந்த விழா மேடையில், சிறந்த நடிகருக்கான விருது ரன்வீர் சிங்கிற்கு வழங்கப் பட்டது. அப்போது அவர் என்ன செய்தார் தெரியுமா? "பத்மாவத்" படத்திற்காக சிறந்த நடிகருக்கான விருது ரன்வீர் சிங்கிற்கு அறிவிக்கப்பட்டதும், அவர் தனது இருக்கையை விட்டு எழுந்து, தீபிகாவை அன்பாக முத்தமிட்டு விட்டு மேடை ஏறினார்.

Advertisment
Advertisements

”மை பியூட்டிஃபுல் ஒய்ஃப், நீங்கள் தினமும் குழந்தையை போல என்னை உற்சாகப்படுத்துகிறீர்கள். ஒவ்வொரு நாளும் ... என் மனைவி முன் வரிசையில் அமர்ந்திருக்கிறாள். என்னைப் பற்றி பெருமிதம் கொள்கிறாள். நான் இன்னும் வேறு என்ன கேட்க முடியும்?” என்ற அவரால் தனது உற்சாகத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. இப்படி உணர்வுப்பூர்வமான, பெருங்களிப்புடைய பேச்சின் ஒரு பகுதியை தனது காதல் மனைவிக்கு அர்ப்பணித்தார் ரன்வீர். தனது மனைவி தீபிகா படுகோனிடம் தன் காதலை வெளிப்படுத்தும் வாய்ப்பை அவர் இழக்கவே இல்லை. நிகழ்ச்சி முழுவதும் தீபிகா படுகோனின் பெஸ்ட் கம்பெனியாக இருந்தார். குறிப்பாக தீபிகா தனது நீண்ட உடையுடன் நடக்கும் போது, அவருக்கு உதவி செய்தார் ரன்வீர்.

சஞ்சய் லீலா பன்சாலியின் "பத்மாவத்" படத்தில் தீபிகா படுகோனே ஹீரோயினாக நடித்திருந்தார். ஆனால் சிறந்த நடிகைக்கான விருதை, நடிகை ஆலியா பட்டிடம் இழந்தார். ராஸி படத்தில் தன் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக சிறந்த நடிகைக்கான ஐஃபா விருதைப் பெற்றார் ஆலியா.

இதற்கிடையில், தீபிகா 2013-ஆம் ஆண்டு தான் நடித்த ’சென்னை எக்ஸ்பிரஸ்’ படத்திற்காக சிறந்த நடிகைக்கான சிறப்பு விருதை ஐஃபாவில் வென்றார். விழாவில் நீண்ட ஹாஃப் ஷோல்டர் கவுனில் தீபிகா கலக்க, கொஞ்சம் காமெடியான தோற்றத்தில் இருந்தார் ரன்வீர்.

Deepika Padukone Ranveer Singh

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: