Rasathi Serial : சன் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் ‘ராசாத்தி’ சீரியலில் விஜயக்குமார், செந்தில், விசித்ரா என மூத்த நடிகர்கள் பலர் நடித்து வருகிறார்கள். பவானி ரெட்டி முதன்மை கதாபாத்திரத்தில் ராசாத்தியாக நடிக்கிறார். தற்போது இந்த சீரியலின் மூத்த நடிகர்கள் பட்டியலில் நடிகை தேவயானியும் இணைந்துள்ளார். இதற்கு முன் சன் டிவி-யில் ஒளிபரப்பான ‘கோலங்கள்’ சீரியலில் அபி என்ற கதாபாத்திரத்தில் நடித்து அப்ளாஸ்களை அள்ளியிருந்தார் தேவயானி. தற்போது மீண்டும் அவர் சீரியலுக்கு வந்திருப்பதை வெகுவாக வரவேற்கிறார்கள் சின்னத்திரை ரசிகர்கள்.
Advertisment
கயலின் நிச்சயதார்த்தம் நின்றதைத் தொடர்ந்து, சிந்தாமணி கோபத்தின் உச்சத்திற்கு செல்கிறார். ”சண்முக சுந்தரத்தோட பொண்ணுங்கறனால தான் நீ இப்படியெல்லாம் பண்ற. இனி நீ அந்த ஃபோட்டோவ பாக்கக் கூடாது, பூ போடக் கூடாது, விளக்கேத்தக் கூடாது” என ராசாத்தியைப் பார்த்துக் கூறுகிறார்.
மெரினாவில் நுரை தள்ளியதற்கு அரசு அலட்சியம் காரணமா?
Advertisment
Advertisements
சிங்கம்பட்டி ஜமீன் வாரிசான செளந்தர வல்லி வெளிநாட்டிலிருந்து இப்போது தான் வீடு திரும்பியிருக்கிறார். அவரின் தம்பி மாதவனுக்கும், ராசாத்திக்கும் தான் திருமணம் செய்ய வேண்டும் என இருவரின் அப்பாக்களும் முன்பே பேசி முடித்துள்ளனர். பூஜை அறையில் பூஜை செய்துக் கொண்டிருக்கும் செளந்தரவல்லி மீது கோபம் கொண்ட மாயாண்டி, கையில் அரிவாளுடன் ‘உன்னை வெட்டியே தீருவேன்’ என வீடு புகுந்து ரகளை செய்கிறார்.
வீட்டிலுள்ளவர்கள் தடுத்தும், அதைப் பொருட்படுத்தாமல் உள்ளே சென்ற மாயாண்டி, கையில் ஆராதனையுடன் இருக்கும் செளந்தர வல்லியை பார்த்ததும் மனம் மாறுகிறார். பின்பு மாதவனின் ஜாதகத்தை கணித்த ஜோசியர் வீட்டுக்கு வந்து, தை 3-ம் தேதிக்குள் திருமணம் நடக்கவில்லை என்றால், இன்னும் 5 ஆண்டுகளுக்கு நடக்காது, என குண்டை தூக்கிப் போடுகிறார்.
அவ்வளவு சீக்கிரம் எப்படி முடியும் என மாதவன் கைகளை பிசைய, இது ஏற்கனவே பேசி முடிச்சது தானே. ராசாத்தி வீட்டில் இருக்கும் அனைவரைப் பற்றியும் எனக்கு நன்றாக தெரியும். நான் அவர்களிடம் பேசுகிறேன் என்கிறார் செளந்தர வல்லி.
அதோடு இப்போது ராசாத்தி எப்படி இருக்கிறாள் என்பதை தெரிந்துக் கொள்ளும் விதமாக, அவளின் சமீபத்திய ஃபோட்டோவையும் தம்பியிடம் வழங்குகிறார் செளந்தர வல்லி.