ராசாத்தி: ”ரெண்டு வாரமா ஒரே சீன் தான், ஆனா போரடிக்கவே இல்ல”

Sun TV Serial: மூத்த நடிகர் விஜயகுமார் நடித்திருந்தும், இன்னும் அவருக்கு முக்கியத்துவம் வாய்ந்த சீன்கள் இன்னும் ஒளிபரப்பப் படவில்லை.

By: October 8, 2019, 4:19:03 PM

Rasathi Serial: புதிதாக சன் டிவி-யில் ஒளிபரப்பைத் தொடங்கிய ராசாத்தி சீரியல் ரசிகர்களின் அமோக வரவேற்பைப் பெற்றுள்ளது.

ராசாத்தி சீரியலுக்கு திரைக்கதை எழுதி, இயக்க்கியிருக்கும் இயக்குநர் ராஜ்கபூரை மனதார பாராட்டலாம் என்கிறார்கள் ராசாத்தி விசிறிகள். காரணம், 2 வாரமாக திருவிழா கொண்டாட்டம் தான் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. ஆனால் ஒரு இடத்தில் கூட சலிப்போ, தொய்வோ ஏற்படவில்லை.

சீரியல் முழுக்க இதுவரை ராசாத்தி ராசாத்தி என்று பவானி ரெட்டிகுத்தான் அதிக முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. மூத்த நடிகர் விஜயகுமார் நடித்திருந்தும், இன்னும் அவருக்கு முக்கியத்துவம் வாய்ந்த சீன்கள் இன்னும் ஒளிபரப்பப் படவில்லை. இப்போதைக்கு ஃபிளாஷ் பேக் காட்சிகளில் வந்து போயிருக்கிறார். இறந்து, ஃபோட்டோவில் தொங்கிக் கொண்டிருக்கிறார்.

ராசாத்தியின் அத்தை பையன் பாண்டியன் கபடி விளையாட்டு வீரர். அவனுக்கு ஆபத்து என்று ராசாத்தி கனவு கண்டு பதற்றப்பட, கடைசியில் ராசாத்திக்குத்தான் அந்த ஆபத்து, அதுவும் அண்ணி சிந்தாமணியால் என்று அப்போதுதான் பாண்டியனுக்கு தெரிய வருகிறது.

அதனால் முளைப்பாரி எடுக்கப்போகும் ராசாத்தியை தடுக்கிறான் பாண்டியன். ஏன் போகக் கூடாது என காரணம் கேட்கும் ராசாத்தியிடம், உன் உயிருக்கு ஆபத்து இருக்கிறது என்கிறான் பாண்டியன். எனக்கு பரிவட்டம் கட்டிய இந்த மக்களுக்காக என் உயிரே போனாலும் பராவாயில்லை, நான் முளைப்பாரி எடுத்தே தீருவேன் எனச் சொல்லி செல்கிறாள் ராசாத்தி.

அண்ணியால் வரும் ஆபத்தை எப்படி கடப்பாள் ராசாத்தி…

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook

Web Title:Rasathi serial sun tv pavani reddy vichithra senthil vijayakumar

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X