Rashmi Gautam Tamil News: தெலுங்கு சின்னத்திரையில் முன்னணி தொகுப்பாளினியாக வலம் வருபவர் ராஷ்மி கவுதம். பிரபல நடன நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியதன் மூலம் தென்னிந்தியாவில் மேலும் பிரபலமடைந்துள்ள இவர், தெலுங்கில் கரண்ட், எவரைனா எப்புடைனா, வெல் டன் அப்பா, கணேஷ் ஜஸ்ட் கணேஷ் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தமிழில் சாந்தனு நடிப்பில் வெளியான “கண்டேன்” படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

தற்போது தெலுங்கு, இந்தி படங்களில் பிஸியாக நடித்து வரும் நடிகை ராஷ்மி, சமீபத்தில், நடிகர் சிரஞ்சீவியின் போலா ஷங்கர் படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு ஐட்டம் பாடலுக்கு நடனமாடி இருக்கிறார். இந்த பாடலுக்கு ராஷ்மியைத்தான் புக் செய்யவேண்டும் என நடிகர் சிரஞ்சீவி நேரடியாக சிபாரிசு செய்ததாக தகவல் வெளியாகி இருந்தது.

இந்நிலையில், ராஷ்மி தெலுங்கு நடிகர் சுடிகள்ளி சுதீரை காதலிப்பதாக கிசுகிசுக்கள் வெளியாகி வந்தன. ஆனால், இதனை மறுத்த இருவரும் தாங்கள் நண்பர்களாகத்தான் பழகி வருகிறோம் என்று தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில், நடிகையும் பிரபல தொகுப்பாளியுமான ராஷ்மி கவுதம், தொழில் அதிபர் ஒருவரை ரகசிய திருமணம் செய்துகொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுபற்றி ராஷ்மி தரப்பில் விளக்கமோ மறுப்போ தெரிவிக்கப்படவில்லை.

தற்போது இந்த தகவல் சமூக வலைதளங்களிலும், இணைய பக்கங்களிலும் தீயாய் பரவி வரும் நிலையில், ராஷ்மி உண்மையில் திருமணம் செய்து கொண்டாரா? என அவரது ரசிகர்கள் கேள்வியெழுப்பி வருகிறார்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“