வசூல் நாயகி... கடைசி 3 படங்கள் ரூ. 500 கோடிக்கு மேல் வசூல்; இந்த நடிகை யாருன்னு தெரியுமா?

தொடர்ந்து வரிசையாக மெகா ஹிட் படங்களில் நடித்தும், உயர்ந்த வசூல் சாதனைகள் படைத்து, ஒரு நாயகியாக வசூல் வெற்றிக்கு முக்கிய முகமாக மாறியுள்ளார். அவர் யார் என்று இந்த பதிவில் தெரிந்துகொள்ளுங்கள்.

தொடர்ந்து வரிசையாக மெகா ஹிட் படங்களில் நடித்தும், உயர்ந்த வசூல் சாதனைகள் படைத்து, ஒரு நாயகியாக வசூல் வெற்றிக்கு முக்கிய முகமாக மாறியுள்ளார். அவர் யார் என்று இந்த பதிவில் தெரிந்துகொள்ளுங்கள்.

author-image
WebDesk
New Update
download (75)

இன்றைய சினிமா உலகத்தில், ஒரு திரைப்படத்தின் வசூல்தான் அந்தப் படத்தின் கமர்ஷியல் வெற்றிக்கு முக்கியமான அளவுகோலாக கருதப்படுகிறது. குறிப்பாக, இப்போது பெரும்பாலான தயாரிப்பாளர்களும் இயக்குனர்களும், ஒரு படம் ரூ. 500 கோடி அல்லது ரூ. 1000 கோடி வரை வசூல் செய்ய வேண்டும் என்ற குறிக்கோளை வைத்துக்கொண்டு வேலை செய்கிறார்கள்.

Advertisment

இந்த சூழலில், தொடர்ந்து பாக்ஸ் ஆபிஸ் வசூலில் ரூ. 500 கோடி அதற்கும் மேற்பட்ட ரேஞ்சில் கலக்கிய படங்களை வழங்கி வரும் ஒரு நாயகி, இந்த தொழிலில் தனக்கென்று ஒரு தனி இடத்தை பிடித்திருக்கிறார். வசூலில் மாபெரும் வெற்றி பெறும் படங்களின் முக்கியக் காரணியாகவும், தனது நடிப்புத் திறமையோடு ரசிகர்களை திரையில் கவர்ந்தெடுக்கக்கூடிய சக்தியோடும், அந்த நடிகை சினிமா உலகத்தில் 'பாக்ஸ் ஆபீஸ் குயின்' என்ற பெயருக்கேற்ற வரவேற்பைப் பெற்றுள்ளார்.

தொடர்ந்து வரிசையாக மெகா ஹிட் படங்களில் நடித்தும், உயர்ந்த வசூல் சாதனைகள் படைத்தும், ஒரு நாயகியாக வசூல் வெற்றிக்கு முக்கிய முகமாக மாறியுள்ளார் என்பது குறிபிடிக்கத்தக்கது. இது சினிமாவில் நடிகைகளின் பங்கும் வருமானத்திலும், புகழிலும் மாற்றம் ஏற்படுத்தியுள்ளது.

அவர் யார்?

அவர் வேறு யாரும் இல்லை — இந்திய ரசிகர்கள் பாசத்துடன் "நேஷனல் க்ரஷ்" என அழைக்கும் நடிகை ராஷ்மிகா மந்தனா தான். பண்பும் அழகும் கலந்த தனது நடிப்புத் திறமையால், ராஷ்மிகா தற்போது இந்திய சினிமாவின் வசூல் குயின்களில் ஒருவராக திகழ்கிறார். இதை நிரூபிப்பதுபோல், கடந்த சில வருடங்களில் அவர் நடித்த படங்கள் அனைத்தும் உலகளவில் அதிவேகமான வசூல் சாதனைகள் படைத்துள்ளன. உதாரணத்திற்கு, ரண்பீர் கபூர் உடன் நடித்த ‘அனிமல்’ படம் மட்டும் ரூ. 800 கோடிக்கு மேல், அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளிவந்த ‘புஷ்பா’ ரூ. 1800 கோடி மற்றும் சமீபத்தில் வெளியான ‘சாவா’ ரூ. 700-800 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளன.

Advertisment
Advertisements

download (74)

இத்தனைப் பெரிய ஹிட் படங்கள் வரிசையாக வெளிவருவது, ராஷ்மிகாவின் பிராண்ட் மதிப்பையும், ரசிகர்கள் மத்தியில் அவர் பெற்றுள்ள மகத்தான வரவேற்பையும் பிரதிபலிக்கிறது.

இந்நிலையில், ராஷ்மிகாவின் நடிப்பில் அடுத்ததாக வெளிவரவிருக்கும் படம் ‘தமா’. இந்தப் படத்தின் ட்ரைலர் ரசிகர்களிடம் பரபரப்பை உருவாக்கி உள்ளது. அக்டோபர் 21ஆம் தேதி வெளியாகவுள்ள இந்தப் படம் கூட ரூ. 500 கோடிக்கு மேல் வசூல் செய்யும் என எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உள்ளது. தொடர்ந்து வெற்றிக்கொடி நாட்டி வரும் ராஷ்மிகா, 'தமா' படம் மூலமாகவும் அந்த வரிசையை தொடர்கிறாரா என்பதைப் பார்க்க, ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

உண்மையில், இப்போது ரசிகர்களிடம் உள்ள கேள்வி ஒன்றே: “தமா வசூல் வரலாற்றில் இன்னொரு மெகா ஹிட் ஆகுமா?” என்பது தான். 

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: