தெலுங்கு சினிமாவின் முன்னணி ஹீரோ விஜய் தேவரகொண்டாவுடன் கீத கோவிந்தம் படத்தில் ஹீரோயினாக நடித்து பிரபலமானவர் நடிகை ரஷ்மிகா மந்தனா. தெலுங்கு கன்னட சினிமாவில் பிஸியாக இருக்கும் ரஷ்மிகா மந்தனா தெலுங்கு சினிமாவின் முன்னணி ஹீரொயினாக நடித்து வருகிறார்.
ரஷ்மிகா மந்தனா தமிழ் சினிமாவில் முதல் முறையாக கார்த்தி நடித்த சுல்தான் படத்தின் மூலம் அறிமுகமனார். பக்கத்துவீட்டு தேவதையைப் போல இருக்கும் ரஷ்மிகா மந்தனா தமிழ் ரசிகர்களையும் கவர்ந்துள்ளார். கோலிவுட், டோலிவுட்டில் நடித்த ரஷ்மிக மந்தனா இப்பொது பாலிவுட்டுக்கும் சென்றிருக்கிறார்.
பாலிவுட்டில் சித்தார்த் மல்ஹோத்ராவின் மிஷன் மஜ்னு என்ற படத்தில் நடிக்கிறார். பாலிவுட்டில் ஒரு ரவுண்ட் வர வேண்டும் என்பதற்காக அங்கே கவனம் செலுத்த மும்பையிலேயே ஒரு வீடும் வாங்கியிருக்கிறாராம்.
சினிமாவில் டாப் ஹீரோயின் என்றாலும் ரஷ்மிகா மந்தனா, சோசியல் மீடியாவில் எப்போதும் ஆக்டிவ்வாக இருப்பார். ரஷ்மிகா மந்தனா பதிவிடும் எந்த புகைப்படங்களும் வீடியோக்களும் உடனே ரசிகர்களை ஈர்த்து வைரலாகி விடும்.
அந்த வரிசையில், ரஷ்மிகா மந்தனா, 3 நொடிகளில் காதலில் விழுந்துவிட்டேன் என்று சொல்வார்கள் இல்லையா அது போல என்று தனது செல்ல நாய்க்குட்டியை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தியிருக்கிறார்.
ரஷ்மிகா மந்தனா இன்ஸ்டாகிராமில் தனது செல்ல நாய்க்குட்டி புகைப்படத்தை பதிவிட்டு குறிப்பிட்டிருப்பதாவது: “ஏய் நண்பர்களே.. இங்கேயுள்ள அனைத்து குழப்பங்களுக்கும் நடுவே .. எனது மகிழ்ச்சியின் எனது மகிழ்ச்சி மூட்டையை கண்டடைந்தேன்.. இது முழு நேரமும் என்னை உற்சாகமாக வைத்திருக்கிறது..
என் செல்லம் ஒன்றை உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறேன் இவள் பெயர் ஆரா…
நீங்கள் 3 வினாடிகளில் காதலில் விழுந்தேன் என்று சொல்வார்கள் இல்லையா… இவள் என் இதயத்தை 0.3 மில்லி விநாடிகளில் உருக்கிவிட்டாள்.. எப்படியிருந்தாலும் உங்களைப் தெரிவிக்க விரும்பினேன்!
உங்களுக்கு அன்பும் பலமும்!” என்று குறிபிட்டுள்ளார்.
ரஷ்மிகா மந்தனா தனது அழகான நாய்க்குட்டியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை ரசிகர்கள் பலரும் பகிருந்து மகிழ்ச்சியை தெரிவித்து வருகின்றனர்.
இதே போல, தமிழ் சினிமாவில் நடிகை வரலட்சுமி சரத்குமார் தனது செல்ல நாய்க்குட்டியை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தி வீடியோ வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”