கோலிவுட், டோலிவுட், பாலிவுட் என பிசியாக இருக்கும் நேஷ்னல் கிரஷ் ராஷ்மிகா மந்தனா தனக்கு ஒரு சகோதரி இருக்கிறார் என்றும் அவருக்கும் தனக்கும் 16 வயது வித்தியாசம் என்று கூறி ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.
நேஹா துபியாவுடனான ஒரு வெளிப்படையான உரையாடலில், தனக்கு 10 வயதில் ஒரு சகோதரி இருப்பதாகவும், அவர்களுக்கு இடையே 16 வயது வித்தியாசம் இருப்பதாகவும் ரஷ்மிகா மந்தனா தெரிவித்தார்.
ரஷ்மிகா மந்தனா தனது நடிப்பில் சமீபத்தில் வெளியான சாவா படத்தின் வெற்றியைக் கொண்டாடி வருகிறார். அந்த படத்தில் ரசிகர்கள் அவருடைய அவரது நடிப்பைப் பற்றிப் பாராட்டிக் கொண்டிருக்கும் வேளையில், ராஷ்மிகா சமீபத்தில் நேஹா துபியாவுடன் நடந்த "நோ ஃபில்டர் வித் நேஹா" நிகழ்ச்சியில் ஒரு சுவாரஸ்யமான உரையாடலில் தனது குடும்பத்தைப் பற்றி மனம் திறந்து பேசினார்.
அப்போது ராஷ்மிகா தனது தங்கையைப் பற்றிய சில மனதைத் தொடும் மற்றும் ஆச்சரியமான விவரங்களைப் பகிர்ந்து கொண்டார், தனக்கும் தனது தங்கைக்கும் இடையே 16 வயது வித்தியாசம் என்று கூறினார்.
/indian-express-tamil/media/media_files/2025/02/27/tyRzr7Cmtqs5XkYoEQQ3.jpg)
“எனக்கு ஒரு தங்கை இருக்கிறாள், அவளுக்கு 10 வயது, எனவே எங்களுக்கு இடையே சுமார் 16 வயது இடைவெளி உள்ளது” என்று ரஷ்மிகா உரையாடலின் போது தெரிவித்தார்.
இந்த ஆச்சரியமான செய்டி நேஹா தூபியாவை மிகவும் ஆர்வத்துடன் கேட்க வைத்தது. நேஹா விவாதத்தில் ஒரு சுவாரஸ்யமான விஷயத்தைச் சேர்த்தார்: “ஒரு கட்டத்தில், நீங்கள் உங்கள் சகோதரியிடம் யாருக்கும் நீ எனது தங்கை என்பதை யாருக்கும் சொல்லக்கூடாது, யாருக்கும் தெரியக்கூடாது. அதனால், அவர் இயல்பாக வளர்க்கப்படுவார் என்று கூறினீர்களா” என்று கூறினார்.
இதற்கு ரஷ்மிகா வெளிப்படையாக பதிலளித்தார், அவரது பெற்றோர் எப்போதும் தனது புகழ் அதிகரித்து வந்த போதிலும், அவர் ஒரு அடித்தளமான மற்றும் சுதந்திரமான வாழ்க்கையை வாழ்வதை எவ்வாறு உறுதி செய்துள்ளனர் என்பதை விரிவாகக் கூறினார். "ஆமாம், இது உன் வாழ்க்கை என்று என் பெற்றோர் என் மனதில் பதிய வைத்ததனர், உன் வாழ்க்கையில் எங்களை ஈடுபடுத்த வேண்டாம்” என்று கூறியதை அவர் விளக்கினார்.
ரஷ்மிகா எப்போதும் சுதந்திரமாக இருக்கவும், தனது பிரபல அந்தஸ்து தனது தனிப்பட்ட வாழ்க்கையை மறைக்க விடக்கூடாது என்றும் கற்றுக்கொடுக்கப்பட்டுள்ளடு என்பது அவரது பேச்சில் இருந்து தெளிவாகிறது.
தன்னுடைய பெற்றோரின் வளர்ப்புதான், இன்று தன்னை இந்த நிலைக்கு வடிவமைத்தது, தனது சகோதரியும் அதையே பெற வேண்டும் என்று விரும்புவதாக ரஷ்மிகா விளக்கினார்.
“என் சகோதரியிடம் எனக்கு எப்போதும் ஒரு விஷயம் உண்டு, அவள் விரும்பும் எதையும் வாங்க முடியும், அவள் அதைச் சொல்ல முடியாது, அவள் அதைப் பெறுகிறாள். ஆனால், நான் அதை விரும்பவில்லை, ஏனென்றால், நான் எனது வளர்ப்பின் காரணமாக இன்று நான் இந்த நிலையில் இருக்கிறேன்” என்று அவர் கூறினார்.
“அவளுக்கும் அதே விஷயம் இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். நிச்சயமாக, நான் அவளுக்கு நிறைய பாதுகாப்பு கொடுக்க முடியும், நான் நிறைய ஆதரவு தர முடியும், ஆனால் சரியான வயது வரும்போதுதான். இப்போது, மிகக் குறைவு." என்று கூறினார். எதிர்காலத்தில் தனது சகோதரிக்கு பாதுகாப்பையும் வசதியான வாழ்க்கையையும் வழங்க முடியும் என்றாலும், இந்த மென்மையான வயதில் சரியான வகையான வளர்ப்பை அனுபவிப்பது அவசியம் என்று ரஷ்மிகா வெளிப்படுத்தினார்.
ராஷ்மிகா மந்தனா, தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் உடன் ஜோடியாக வாரிசு படத்தில் நடித்தார். தற்போது, ராஷ்மிகாவின் நடிப்பில் வெளியாகி உள்ள சாவா திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.