/tamil-ie/media/media_files/uploads/2019/11/Rashmika.jpeg)
Rashmika mandanna
Rashmika Mandanna: சாலோ, கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் போன்ற தெலுங்கில் ஹிட்டான திரைப்படங்களில் நடித்துள்ள நடிகை ரஷ்மிகா மந்தண்ணா தமிழ் ரசிகர்களிடையே மிகவும் பிரபலம். விஜய் தேவரகொண்டாவுடன் அவர் இணைந்து நடித்த ’கீதா கோவிந்தம்’ படத்தில் இடம்பெற்றிருந்த ‘இன்கெம் இன்கெம்’ பாடலுக்கு அதிகளவில் தமிழ் ரசிகர்கள் உள்ளனர். இந்த ஜோடி மீண்டும் இணைந்து நடித்த டியர் காம்ரேட் திரைப்படம் தமிழிலும் டப்பிங் செய்யப்பட்டது.
rashmika mandanna whats appதற்போது கார்த்தி நடிக்கும் ’சுல்தான்’ திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். இதனை ’ரெமோ’ படத்தின் இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் இயக்குகிறார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படம் 2020 கோடையில் வெளியாகிறது.
தவிர, ராஷ்மிகா நடிகர் விஜய்யின் மிகப்பெரிய ரசிகை என்பதை அவரே பல சமயங்களில் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரி பக்கத்தில், பிகில் படத்தின் ‘சிங்கப்பெண்ணே’ பாடலை பகிர்ந்து, “ஏனென்று தெரியவில்லை. இந்த வரிகளைக் கேட்கும் போது புல்லரிக்கிறது. அந்த குரல், அந்த இசை, அதில் வரும் நடிகர்கள்...” என்று குறிப்பிட்டுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)

Follow Us