Advertisment

ஒரு நடிகைக்கு எனர்ஜி லெவல் இப்படி இருக்கணும் - ராஷ்மிகா மந்தனா வீடியோ

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Rashmika Mandanna viral video

Rashmika Mandanna viral video

ராஷ்மிகாவிடம் ரசிகர்களுக்கு பிடித்த விஷயம், அவரது குழந்தை முகம். பச்ச மண்ணு மாதிரி இருக்கும் அவரது தோற்றம், ரசிகர்களுக்கு நடிகை என்பதைத் தாண்டி அவர் மீது ஒரு பிடிப்பு ஏற்பட காரணம் என்பது அடியேனின் கருத்து.

Advertisment

சிங்காரச் சென்னை வரலாறு 1 : இது தங்கசாலை தெரு உருவான கதை...

தமிழ், தெலுங்கில் வெளியான 'டியர் காம்ரேட்' படத்தில் நடித்து பிரபலமானவர் ராஷ்மிகா மந்தனா. தற்போது கார்த்தி ஜோடியாக சுல்தான் படத்தில் நடித்து வருகிறார். தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

கலர் கலரான கவுன்களில் பொம்மை போல் இருக்கும் டிவி பிரபலங்கள்!

சமீபத்தில் இவர் அளித்த பேட்டியில், "திரையிலும், திரைக்கு பின்னாலும் எப்போதும் உஷாராகவும், சுறுசுறுப்பாகவும் இருப்பேன். மற்றவர்களை பேசவிடாமல் நானே பேசிக்கொண்டு இருப்பேன். தொடர்ந்து வெற்றி படங்கள் கொடுப்பதாக பலரும் பாராட்டுவது மகிழ்ச்சி அளிக்கிறது.

வீட்டில் இருந்தாலே மனதுக்கு சந்தோஷம் வரும். நல்ல கதைகளை தேர்வு செய்து நடிப்பதால்தான் எனக்கு பெயர் கிடைத்துள்ளது. சினிமாவுக்கு வந்து சிறிது காலம்தான் ஆகிறது. இந்த காலகட்டத்தில் நான் கேட்டவற்றில் 50-க்கும் மேற்பட்ட கதைகளை நன்றாக இல்லை என்று நிராகரித்து இருக்கிறேன்.

நான் கடுமையாக உழைத்து இந்த இடத்துக்கு வந்து இருக்கிறேன். பெரிய நடிகர்கள் படங்கள் தோற்கின்றன. ஆனால் ராஷ்மிகா படங்கள் வெற்றி பெறுவதற்கு அதிர்ஷ்டம்தான் காரணம் என்று சிலர் பேசுகிறார்கள். அதிர்ஷ்டத்தால் நிச்சயம் இல்லை. அதற்கு பின்னால் எனது உழைப்பு நிறைய இருக்கிறது" என்று கூறியிருந்தார்.

அடேங்கப்பா! லோஸ்லியா பக்தர்கள் இவ்வளவு கவர்ச்சியை ஏற்பார்களா?

இந்நிலையில், சமீபத்தில் இவர் ஏர்போர்ட்டில் செம ஜாலியான மூடில் நடந்து வந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

2, 2020

அதில், நடையின் போதே ஸ்டெப்ஸ் போட்டு ஆடிக் கொண்டே வருகிறார். வீடியோவை பகிரும் ரசிகர்கள், அவரது எனர்ஜி லெவலை புகழ்ந்து ஷேர் செய்து வருகின்றனர்.

குழந்தை மனம் படைத்த தலைவி ராஷ்மிகா வாழ்க!!

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment