ரஷ்மிகா மந்தனா மற்றும் ஷ்ரத்தா தாஸ்
விமானத்தில் பயணம் செய்தபோது திடீரென ஏற்பட்ட தொழில்றுட்ப கோளாறு காரணமாக விமானம் புறப்பட்ட இடத்திலேயே தரையிறக்கப்பட்டதால் நாங்கள் மிகுந்த பதற்றத்தில் இருந்தோம் மரணத்தில் இருந்து உயிர் தப்பியுள்ளோம் என்று நடிகை ராஷ்மிகா மந்தனா கூறியுள்ளார்,
தற்போதைய இந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக இருப்பவர் தான் ராஷ்மிகா மந்தனா. இவர் டாடா குழுமத்திற்கு சொந்தாமான விஸ்தாரா விமானத்தின் மூலம் மும்பையில் இருந்து ஹைதராபாத்திற்கு சென்றுள்ளார். இந்த பயணத்தில் அவருடன் நடிகை ஷர்த்தா தாஸூம் பயணித்த நிலையில், விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் தொழில்நுட்பா கோளாறு ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக பயணிகள் பதற்றமடைந்த நிலையில், 30 நிமிட இடைவெளிக்கு பின் விமானம் மும்பை சத்பதி சிவாஜி விமான நிலையில் தரையிறக்கப்பட்டுள்ளது. தொழில்றுட்ப கோளாறு காரணமாக விமானம் அவசர அவசரமான தரையிறக்கப்பட்டது பயணிகள் மத்தியில் பதற்றத்தை அதிகரித்துள்ளது. இது தொடர்பான தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் நடிகை ராஷ்மிகா பதிவு செய்துள்ளார்.
இந்த பதிவில், நடிகை ஷ்ரத்தா தாஸுடன் எடுத்துக்கொண்ட ஒரு செல்ஃபி மற்றும் மற்றொரு படத்தைப் பகிர்ந்துள்ள அவர், இரு எங்கள் இருவரின் கால்களும், ஃபுட்போர்டுக்கு எதிராக கடுமையான அழுத்தத்தை சந்தித்தது. "உண்மையான தகவல், இன்று நாங்கள் மரணத்திலிருந்து தப்பித்தோம்" என்று பதிவிட்டுள்ளார். ராஷ்மிகாவின் இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.அதிஷ்டவசமாக இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
கடந்த ஆண்டு இறுதியில் நடிகர் ரன்பீர் கபூர் நடிப்பில் வெளியான அனிமல் படத்தின் மூலம் தற்போது இந்திய சினிமாவில் உச்ச நட்சத்திரமாக மாறியுள்ள ராஷ்மிகா, அடுத்தடுத்து படங்களில் கமிட் ஆகி வருகிறார். மேலும் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில், வெளியான அனிமல் திரைப்படம் கடுமையான விமர்சனங்களை சந்தித்தாலும், எல்லா காலத்திலும் மிகப்பெரிய வசூல் செய்த படங்களின் பட்டியலில் இணைந்துள்ளது.
இதன் காரணமாக அடுத்தடுத்து இந்தி படங்களில் கமிட் ஆகி வரும் ராஷ்மிகா அடுத்ததாக புஷ்பா 2 என்ற பெரிய படத்தில் நடித்து வருகிறார். அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், அதன் தொடர்ச்சியாக வெளியாக உள்ள புஷ்பா 2 படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த படம் வரும் ஆகஸ்ட் மாதம் பிரமாண்டமாக வெளியிட தயாராகி வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)

Follow Us