தெலுங்கு, தமிழ், இந்தி என பான் இந்தியா ஹீரோயினாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. முன்னணி நடிகர்களுடனும் ராஷ்மிகா இணைந்து நடித்து வருகிறார். தமிழில் விஜய், தெலுங்கில் அல்லு அர்ஜுன், தேவர்கொண்டா, இந்தியில் ரன்வீர் கபூர் உள்ளிட்டோருடன் நடித்துள்ளார்.
தமிழில் தற்போது தனுஷ் உடன் குபேரா படத்தில் நடித்து வருகிறார். பெங்களூருவில் கல்லூரி படிப்பை முடித்த ராஷ்மிகா மாடலிங் துறையில் நுழைந்தார். கடந்த 2016-ம் ஆண்டு கன்னடத்தில் வெளியான க்ரிக்கி பார்ட்டி என்ற படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானவர் ராஷ்மிகா.
முன்னதாக, தனது 19 வயதில் கோபிலோலா எனும் கன்னட படத்திற்கு ராஷ்மிகா முதல் முதலில் ஆடிஷன் செய்துள்ளார். அப்போது அதில், நடித்தும், நடனம் ஆடியும் தனது திறமையை வெளிபடுத்தி உள்ளார்.
எனினும், ராஷ்மிகாவுக்கு அந்த படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. இவரின் இந்த முதல் பட ஆஷடின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“