திராவிட ஜீவா
'முண்டாசுப்பட்டி' படம் எடுத்த ராம்குமாரின் அடுத்த படம் ராட்சசன். அமலாபால், ராமதாஸ், ராதாரவி, நிழல்கள் ரவி, காளிவெங்கட் உள்ளிட்டோர்கள் நடிப்பில் ஜிப்ரான் இசையில், பி.வி. சங்கரின் ஒளிப்பதிவில் வெளிவந்திருக்கும் படம்.
பொதுவாக இயக்குநர்கள் தன்னுடைய ஸ்டைல், அதாவது தனக்கென ஒரு பாணியை கையாள்வர். ஹாரர், காமெடி, சென்டிமென்ட், ஆக்க்ஷன் என்ற பாதையில் தொடரும் அல்லது கமர்சியலுக்காவது காம்ப்ரமைஸ் செய்வர். ஆனால், இரண்டாவது படத்திலேயே முற்றிலும் மாறுபட்ட ஹாரர் எனப்படும் த்ரில் கதையை படமாக்கி கதைச்சரக்கு எனக்கிருக்கு என்று சொல்லியிருகின்றார் இயக்குநர் ராம்குமார்.
சினிமா இயக்குநராக முயற்சி செய்யும் நாயகன் விஷ்னு விஷால் தன்னுடைய பாதை மாறி போலீஸ் அதிகாரியாகும் சூழல் உறுவாகின்றது. ஆனால் அவர் சினிமாவுக்காக எவ்வித கதைத் தயாரிப்புடன் இருக்கின்றாரோ அதே சூழல் அவரது வேலையில் உருவாகின்ற போதே இயக்குநர் ராம்குமாரின் திரைக்கதை சூப்பர் ஃபாஸ்ட் ட்ரெய்ன் வேகத்தில் செல்கின்றது.
ஆனால் முதல் பாதியில் செல்லும் வேகம் இரண்டாவது பாகத்தில் வெகு நேரம் சிக்னல் கிடைக்காத ட்ரெயின் நிற்பது போல் இழுப்பதை தவிர்த்திருக்கலாம். ஆனாலும் ராம்குமார் இயக்கம் நிச்சயம் குறை சொல்லமுடியாத அளவிலே இருப்பது உண்மை.
அமலாபால் ஆசிரியையாக வந்து போகின்றார். பள்ளியில் குழந்தை காணாமல் போனதை கண்டு பிடிக்கும் பொறுப்பும் சைக்கோ கொலையாளியை கண்டுபிடிக்கும் வழக்கும் விஷ்ணு விஷாலுக்கு வருகின்றது இடையில் அவர் பணிநீக்கம் செய்யப்படும் சூழல் உருவாகின்றது.
அதை மீறி அவர் சைக்கோ கொலையாளியை கண்டறிந்தாரா என்பதுதான் கதை. சைக்கோ கொலையாளியை கடைசி வரை காட்டப்படாதது திரைக்கதையில் சிறந்த இயக்குநராக இருப்பாரோ என்று நினைக்க வைக்கின்றது. அது ராம்குமாரின் ப்யூச்சர் கேரியருக்கு ப்ளஸ். விஷ்ணு விஷால் படம்முழுக்க வியாபித்துள்ளார். இன்னும் சொல்லப்போனால் படத்தின் பெரிய பலமே அவர்தான்.
ராதாரவி, நிழல்கள்ரவி, ராமதாஸ் போன்றோர் தங்களது சீனியர் நடிப்பை வெளிப்படுத்தி படம் இயல்பாக செல்ல உதவியிருக்கின்றனர். அமலா வழக்கமான ஹீரோயின். படத்தின் இசை பின்ணனியில் மிரட்டியிருக்கின்றார் ஜிப்ரான் என்றே சொல்லவேண்டும்.
இந்த ஜிப்ரானை வைத்து உலகநாயகன் கமல்ஹாசனைவிட நன்றாக வேலைவாங்கியிருக்கின்றார் இயக்குநர். ஒளிப்பதிவு பிவி சங்கர் தன்னுடைய பங்கை சிறப்பாகவே செய்துள்ளார். மொத்தத்தில் ராட்சசன் நிச்சயம் ரசிக்கவைக்கும் ராட்சசனே.
படம் பார்த்த சினிமா ரசிகர்கள் ஆதரவு 70%
ஆர்டினரி ரசிகர்கள் 50%
பொதுமக்கள் ஆதரவு 60%