விஷால், பிரியா பவானி சங்கர் நடிப்பில் தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் ஹரி இயக்கத்தில் வெளியாகி இருக்கும் ரத்னம் படம் விமர்சனம்
கதைக்களம்
சிறுவயதில் தன் தாயை இழந்த பின் தன்னை அரவணைத்த சமுத்திரக்கனியை காப்பாற்றுவதற்காக கொலை செய்துவிட்டு சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு செல்லும் நாயகன் ரத்னம் (விஷால்), அதன் பிறகு சமுத்திரகனிக்காக எதையும் செய்யும் விசுவாசமான அடியாளாக மாறுகிறார்.
இந்நிலையில் நீட் தேர்வுக்கு படித்துக் கொண்டிருக்கும் நாயகி பிரியா பவானி சங்கரை கொல்ல எதிரிகள் முயற்சிக்க, அதிலிருந்து அவரை ஹீரோ எப்படி காப்பாற்றுகிறார் என்பதும், வில்லன்கள் ஏன் நாயகியை துரத்துகிறார்கள் என்பதை சொல்வதே படத்தின் மீதி கதை
நடிப்பு
ஆக்சன் ஹீரோவுக்காகவே அளவெடுத்து செய்தது போல ரத்னம் கதாபாத்திரத்துக்கு கச்சிதமாக பொருந்துகிறார் விஷால். அவருடைய கம்பீரமும், ஆக்ரோஷமான வசன உச்சரிப்பும், அனல் பறக்கும் சண்டை காட்சிகளும் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது. நாயகி பிரியா பவானி சங்கருக்கும் ஒரு வலுவான கதாபாத்திரம். சமுத்திரகனி, யோகிபாபு, முரளி ஷர்மா ஆகியோரின் நடிப்பும் படத்திற்கு பலம்.
இயக்கம் மற்றும் இசை
ஹரி படம் என்றாலே ஆக்சன் காட்சிகளுக்கும், விறுவிறுப்பான திரைகதைக்கும் பஞ்சம் இருக்காது என்னும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் இப்படத்தை வேலூர் மற்றும் ஆந்திராவை மைய்யமாக கொண்டு கதைக்களம் அமைத்திருக்கிறார் இயக்குனர் ஹரி.
பரபரப்பாக காட்சிகளை நகர்த்தும் முயற்சியில் வெற்றி கண்ட இயக்குனர், வலிமையான திரைக்கதை அமைப்பதில் சற்று சறுக்கிவிட்டார். இப்படத்தில் DSPயின் பாடல்கள் சூப்பராகவும் பின்னணி இசை சூப்பர் டூப்பர் ஆகவும் அமைந்துள்ளது
படத்தின் ப்ளஸ்
# ஆக்ஷன் காட்சிகள்
# இடைவேளை சிங்கிள் ஷாட் சேஸிங்
# DSPயின் தரமான இசை
# சுகுமாரின் மிரட்டலான ஒளிப்பதிவு
# செண்டிமெண்ட் காட்சிகள்
படத்தின் மைனஸ்
# சொதப்பலான திரைக்கதை
# அதித வன்முறை
# பார்த்து பழகி போன காட்சிகள்
மொத்தத்தில் எந்தவித தாகத்தையும் ஏற்படுத்தாமல் ஒரு சராசரி ஆக்சன் த்ரில்லர் படமாக ரத்னம் முடிகிறது
- நவீன் சரவணன்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“