Tamil cinema news: தமிழில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளிவந்த ‘ராட்சசன்’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகியவர் ‘ரவீனா தாஹா’. சின்னத்திரை சீரியல்களில் கலக்கி வரும் இவர் ’கதை சொல்லப் போறோம்’, ‘ஜில்லா’, ’தீரன் அதிகாரம் ஒன்று’ போன்ற திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். எனினும், இவர் ராட்சசன் படத்தில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதன் மூலம் ரசிகர்கள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருந்தார்.
முன்னதாக, ஜீ தமிழில் ஒளிபரப்பாகி ’பூவே பூச்சூடவா’ எனும் சீரியலில் நடித்து வந்த ரவீனா தாஹா, தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘மௌன ராகம்’ சீரியலில் நடித்து வருகிறார். ஆரம்பத்தில் இந்த சீரியலில் வரும் சுருதி கதாபாத்திரத்திற்காக ஆடிஷனுக்கு சென்றவர், பிறகு சக்தி கதாபாத்திற்கு தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். இந்த சீரியல் கொரோனா லாக் டவுன் காரணமாக நிறுத்தப்பட்ட இருந்த நிலையில் தற்போது பரபரப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த நிலையில், ரவீனா தாஹா நடிகர் விஜய்யின் மகன் சஞ்சையுடன் நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளார். சஞ்சய் ஹீரோவாக நடித்தால் அப்படத்தில் தான் அவருடன் ஹீரோயினாக நடிக்க விரும்புகிறேன் என்று கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் விஜய்யின் மகன் சஞ்சய் சினிமா தொடர்பான படிப்பை வெளிநாட்டில் சென்று படித்தவர். அவர் தற்போது சினிமா துறையில் சாதிக்க ஆர்வம் காட்டிவருகின்றார். ஒரு பெரிய இயக்குநர் ஆக வேண்டும் என்பதே அவரின் விருப்பம் என்றும், முன்னணி நடிகரின் மகன் என்பதால் அவரும் நடிக்கத்தான் வருவார் என்று பலரும் கருத்து தெரிவித்தனர்.

ஆனால், நடிகர் விஜய் பீஸ்ட் பட வெளியிட்டுக்கு முன் அளித்திருந்த பேட்டியில், அது போன்ற கருத்துக்களுக்கு முற்றுப்புள்ளி வைத்திருந்தார். அந்த பேட்டியில் விஜய், ‘சஞ்சய் தற்போதைக்கு நடிப்பதில் ஆர்வம் இல்லை. ப்ரேமம் இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் சஞ்சைக்காக ஒரு சூப்பர் கதையை கூறினார். ஆனால் சஞ்சய்க்கு நடிக்க ஆர்வம் இல்லாததால் அந்த கதையில் நடிக்க முடியாமல் போனது’ என்று தெரிவித்திருந்தார்.

அப்பா விஜய் இப்படி தெரிவித்துள்ள நிலையில் மகன் சஞ்சய் நடிக்க வருவது என்பது சந்தேகம் தான். இதனால் ரவீனாவின் இந்த ஆசை நிறைவேறுமா என்று தெரியவில்லை. ஆனாலும், சஞ்சய்க்கு இப்பவே டிமாண்ட் அதிகரித்துள்ளது என்று சினிமா வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“