ஆங்கிலத்தில் படிக்க...
90-களில் இந்தி சினிமாவின் முன்னணி நடிகையாக திகழ்ந்த நடிகை ரவீனா டண்டன் படப்பிப்பின்போது ஒருவருடன் உதட்டு காட்சியில் நடித்தது தனக்கு குமட்டலையும் அறுவறுப்பையும் ஏற்படுத்தியாக கூறியுள்ளார்.
1991-ம் ஆண்டு சல்மான்கான் நடிப்பில் வெளியான பத்தர் கீ போல் என்ற படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமான ரவீனா டண்டன், தொடர்ந்து முன்னணி நடிகர்களுடன் பல வெற்றிப்படங்களில் நடித்துள்ளார். 1994-ம் ஆண்டு அர்ஜூன் நடிப்பில் வெளியான சாது படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர், அடுத்து ஆளவந்தான் படத்தில் கமல்ஹாசனுடன் இணைந்து நடித்திருந்தார்.
தமிழ், தெலுங்கு, கன்னடம், உள்ளிட்ட மொழிகளில் ஒரு சில படங்களில் நடித்துள்ள ரவீனா டண்டன் இந்தி படங்களில் முன்னணி நடிகையாக திகழ்ந்தார். மேலும் சமீபத்தில் கன்னடத்தில் வெளியாகி பெரிய வெற்றிப்படமாக அமைந்த கே.ஜி.எஃப் 2 படத்தில் இந்திய பிரதமராக நடித்து பாராட்டுக்களை பெற்றிருந்தார். தற்போது குட்சட்டி என்ற இந்தி படத்தில் நடித்து வரும் ரவீனா திரைத்துறையில் தனது அனுபவங்கள் குறித்து பேசியுள்ளார்.
90-களில் இந்தி சினிமாவின் முன்னணி நடிகையாக இருந்தாலும், திரை வாழ்க்கையில் முத்த காட்சியில் நடிக்க கூடாது என்று கொள்கையுடன் இருந்த ரவீனா டண்டன் கடைசிவரை தனது கொள்கையில் உறுதியாக இருந்தவர். இது குறித்து வதந்திகள் இருந்தபோதிலும், அவர் கடைசிவரை முத்தக் காட்சியில் நடிக்கவில்லை. ஒருமுறை படப்பிடிப்பின்போது ஒரு நடிகருடன் ஒரு சிறிய உதடு ஒட்டும் காட்சியில் நடித்தது தனக்கு அசௌகரியத்தையும் குமட்டலையும் ஏற்படுத்தியதாக நினைவு கூர்ந்துள்ள ரவீனா தனக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் எதையும் தான் எப்போதும் ஏற்கமாட்டேன் என்று கூறியுள்ளார்.
சமீபத்தில் ரவீனா டண்டன் அளித்த பேட்டி ஒன்றில், சினிமாவில் முத்த காட்சியில் நடிக்காதது குறித்து கேட்டபோது, அந்த நாட்களில் ஒப்பந்தங்கள் எதுவும் இல்லை. ஆனாலும் நான் ஒருபோதும் அந்த காட்சிகளில் நடிக்கவில்லை. இந்த காட்சியில் நடிப்பது எனக்கு வசதியாக இல்லை. ஒரு படப்பிடிப்பில் நான் ஒரு நடிகருடன் ஒரு சிறிய கடினமான நெருக்கமாக காட்சியில் நடித்தது எனக்கு நினைவிருக்கிறது. அப்போது தவறுதலாக அவரது உதடுகள் என் உதடுகளை உரசியது எனக்கு நினைவிருக்கிறது.
இது தவறுதலாக நடந்தது தான் என்றாலும் அது கூட தேவையில்லாதது தான். அந்த காட்சி முடிந்தபின் நான் என் அறைக்குச் சென்றேன். அப்போது என் மனநிலை சரியான வழியில் இல்லை. எனக்கு குமட்டல் ஏற்பட்டது. என்னால் தாங்க முடியவில்லை. அப்போது அந்த நடிகர் மன்னிப்பு கேட்டு, தயவு செய்து பல் துலக்குங்கள், வாயை நூறு முறை கழுவுங்கள்.’’ என்று கூறியதாக தெரிவித்துள்ளார்.
முன்னதாக ஏ.என்.ஐ-க்கு (ANI) அளித்த பேட்டியில், ரவீனா “நான் நீச்சல் உடைகள் அணிய விரும்பவில்லை, முத்தக் காட்சிகளில் நடிக்கவில்லை. அதனால் எனக்கு போதுமான அளவு நிதி இருந்தது. உடையில் ஒரு துளி கூட சமரசம் இல்லாமல் ஒன்றிரண்டு பலாத்கார காட்சிகளில் நடித்திருந்த ஒரே நடிகை நான்தான். அந்த காட்சியில் என் உடைகள் அனைத்தும் கலையாமல் அப்படியே இருந்தது என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“