/indian-express-tamil/media/media_files/2025/09/11/ravi-2025-09-11-13-44-03.jpg)
கமல்ஹாசனுக்கே டஃப் கொடுத்த ரவி மோகன்; அண்ணாத்த பாட்டுக்கு என்ன ஒரு டான்ஸ் பாருங்க: த்ரோபேக் வீடியோ!
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் ரவி மோகன். இவர் கடந்த 2003-ஆம் ஆண்டு வெளியான ‘ஜெயம்’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இந்த படத்தை இயக்குநர் ராஜா இயக்கியிருந்தார். இந்த படத்தில் சதா, கல்யாணி உட்பட பலர் நடித்திருந்தனர். ‘ஜெயம்’ படத்தில் ரவி மோகன் நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
தொடர்ந்து, ‘சம் திங் சம் திங்’, ’எம். குமரன் S/O மகாலட்சுமி, ‘சந்தோஷ் சுப்பிரமணியம்’, ‘கோமாளி’, ‘பொன்னியின் செல்வன்’, ’எங்கேயும் காதல்’, ‘ரோமியோ ஜூலியட்’ , ‘கோமாளி’ போன்ற பல படங்களில் நடித்துள்ளார். தற்போது பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.
நடிகர் ரவி மோகனை, ‘ஜெயம்’ படத்திற்கு பிறகு அனைவரும் ஜெயம் ரவி என்றே அழைத்து வந்தனர். சமீபத்தில் தன்னி இனி ரவி மோகன் என்று அழைக்குமாறு தான் தயாரிப்பு நிறுவனம் ஒன்று தொடங்குவதாகவும் அவர் அறிக்கை வெளியிட்டிருந்தார். மேலும் தனது மனைவி ஆர்த்தியை பிரியப்போவதாகவும் தெரிவித்திருந்தார்.
தனது சமூக வலைதள கணக்குளை எல்லாம் தனது மனைவி அவரது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பதாகவும் தனக்கு பணம் தேவை என்றாலும் தான் அவரிடம் தான் போய் கேட்க வேண்டும் என்றும் பல குற்றச்சாட்டுகளை வைத்தார். இது ஒரு பக்கம் இருக்க ரவி மோகன் தனது நெருங்கிய தோழியும் பாடகியுமான கெனிஷாவை திருமணம் செய்து கொள்ளப்போவதாக சர்ச்சைகள் கிளம்பியது.
இதனை உறுதிப்படுத்தும் வகையில் இருவரும் பல நிகழ்ச்சிகளில் ஒன்றாகவே கலந்து கொண்டனர். ஆனால் இந்த சர்ச்சைகளுக்கு இதுவரை இருவரும் எந்த பதிலும் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இப்படி பல சர்ச்சைகளை கடந்து வந்த ரவி மோகன் சமீபத்தில் தனது 45-வது பிறந்தநாளை கொண்டாடினார். இவருக்கு திரைப்பிரபலங்கள் உட்பட பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.
இந்நிலையில், நடிகர் ரவி மோகன் பிறந்தநாளையொட்டி சமூக வலைதளத்தில் அவரது த்ரோபேக் வீடியோ ஒன்றை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர். அதாவது, நடிகர் கமல்ஹாசனின் முன்னிலையில் அவரது ‘ராஜா கைய வச்சா பாடலுக்கு’ ரவி மோகன் ஆடும் வீடியோவை ரசிகர்கள் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.
இதனை பார்த்த பலரும் கமல்ஹாசன் முன்பு ரவி மோகன் அப்பவே இப்படியெல்லாம் நடனமாடியிருக்காரே என்று கமெண்ட்களை பதிவிட்டு வருகின்றனர்.
Rare Video❤️❤️❤️#JayamRavi Dancing for Raja Kaiya Vecha Song Infront of #KamalHaasan 😍😍😍#HBDRaviMohan
— Nammavar (@nammavar11) September 10, 2025
Wishing you a fabulous year ahead @iam_RaviMohanpic.twitter.com/rCXdNtWLVh
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.