இளையராஜா பாடலை நிராகரித்த கேப்டன் பட இயக்குனர்; கோபத்தில் இசைஞானி 5 நிமிடத்தில் போட்ட புதிய மெட்டு செம ஹிட் : எந்தப் பாட்டு தெரியுமா?
விஜயகுமாரின் சின்னகவுண்டர் திரைப்படத்தில் முத்துமணி பாடல் உருவான விதம் குறித்து அப்படத்தின் இயக்குநர் ஆர்.பி. உதயகுமார் சுவாரசியமான தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார்.
விஜயகுமாரின் சின்னகவுண்டர் திரைப்படத்தில் முத்துமணி பாடல் உருவான விதம் குறித்து அப்படத்தின் இயக்குநர் ஆர்.பி. உதயகுமார் சுவாரசியமான தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார்.
சின்ன கவுண்டர் திரைப்படம் 1992 ஆம் ஆண்டு ஆர்.வி. உதயகுமார் இயக்கத்தில், வெளியான ஒரு கிராமிய பின்னணி திரைப்படம் ஆகும். இந்த படத்தில் விஜயகாந்த், சுகன்யா, மனோரமா, கவுண்டமணி, செந்தில், வடிவேலு ஆகியோர் நடித்துள்ளனர். குறிப்பாக முத்துமணி மாலை மற்றும் அந்த வானத்தைப் போல பாடல்கள் வெற்றி பெற்றன.
Advertisment
சின்ன கவுண்டர் திரைப்படத்தில் இடம்பெற்ற முத்துமணி மாலை பாடல், இயக்குநர் ஆர்.வி. உதயகுமார் மற்றும் இசையமைப்பாளர் இளையராஜா இடையே நடந்த ஒரு சுவாரஸ்யமான தருணத்தில் உருவானது என்று இயக்குநர் ஆர்.வி. உதயகுமார் ஒரு தனியார் தொலைக்காட்சி நிகழ்சியில் கூறியுள்ளார். வழக்கமாக ஒரு படத்திற்காக இசையமைக்கப்படும் பாடலைப் போலல்லாமல், இந்தப் பாடல் எதிர்பாராத விதமாக சில நிமிடங்களில் உருவான ஒரு சிறப்புப் பாடல் என்று குறிப்பிட்டுள்ளார்.
இயக்குநர் ஆர்.வி. உதயகுமார் ஒருமுறை படப்பிடிப்புக்குச் சற்று தாமதமாக வந்துள்ளார். அதற்குள், இளையராஜா வேறு ஒரு பாடலை கம்போஸ் செய்து ஒத்திகைக்கும் அனுப்பிவிட்டார். ஆனால், அந்தப் பாடல் உதயகுமாருக்குப் பிடிக்கவில்லை என்று கூறியுள்ளார்.
அவர் இளையராஜாவிடம், "சார், இந்த சாங் எனக்கு பிடிக்கல. நீங்க மணிரத்தினத்துக்கு போடுற மாதிரி ஒரு பாட்டு போட்டுருக்கீங்க. நான் ஒரு கிராமத்துப் படம் எடுக்கிறேன். நம்ம சின்ன கவுண்டருக்கு அந்த அளவுக்கு பில்டப் எல்லாம் தேவையில்லை" என்று தெரிவித்துள்ளார்.
Advertisment
Advertisements
உடனே இளையராஜா சற்றும் யோசிக்காமல், "கார்மனிய தந்தனா தன தந்தன தானனா முத்துமணிமால" என்று பாடியுள்ளார். இந்த மெட்டு இளையராஜா போட்டது. அதிலிருந்து "தன தந்தன தானன தொட்டு தொட்டு தாலாட்ட" என்ற வரிகளை உதயகுமார் எழுதிச் சேர்த்துள்ளார். கோபத்தில், எந்த ஒரு டியூனையும் மனதில் கொள்ளாமல் இளையராஜா இந்தப் பாடலை வெறும் ஐந்து நிமிடங்களில் கம்போஸ் செய்ததாகக் கூறப்படுகிறது.
இதுதான் இளையராஜாவின் மேதைமை. ஒரு சில நிமிடங்களிலேயே ஒரு சிறந்த பாடலை உருவாக்கிவிடும் அவருடைய தனித்துவமான திறமைக்கு இந்தப் பாடல் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு என்று ஆர்.பி. உதயக்குமார் கூறியுள்ளார். விஜயகாந்த் நடித்த இந்த சின்ன கவுண்டர் திரைப்படம் இந்தப் பாடலால் மேலும் சிறப்பு பெற்றது.