வந்தாச்சு மேலும் ஒரு பிக்பாஸ் – ஆனால் இது வீட்ல இல்ல வெளியில!

Survivor Reality Show to be launched in tamil soon Tamil News: தற்போது வெளிநாடுகளில் பிரபலமாகி வரும் ‘சர்வைவர்’ என்ற ரியாலிட்டி நிகழ்ச்சியை தமிழில் ‘ஜீ’ நிறுவனம் தயாரிக்க உள்ளது.

Reality Show Survivor Tamil News: survivor reality show to be launched in tamil soon

Reality Show Survivor Tamil News: ‘பிக்பாஸ்’ ரியாலிட்டி நிகழ்ச்சி இந்திய ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்ற ஒன்றாக உள்ளது. இந்த நிகழ்ச்சி தமிழில் மட்டுமல்லாது ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் உட்பட பல மொழிகளில் தயாரிக்கப்பட்டு வருகிறது. இதை தமிழில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். இதுவரை 4 சீசன்களை கடந்துள்ள இந்த நிகழச்சியின் 5 சீசன் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்பட உள்ளது.

இது ஒரு புறம் இருக்க, இந்தியாவில் பல மொழிகளில் தயாரிக்கப்பட்டு ஒளிபரப்படும் இந்த ‘பிக்பாஸ்’ ரியாலிட்டி நிகழ்ச்சி, ஆங்கில ரியாலிட்டி நிகழ்ச்சியான ‘பிக் பிரதர்’ தழுவல் ஆகும். ஆங்கிலத்தில் இருந்து தழுவப்பட்ட இது போன்ற ரியாலிட்டி நிகழ்ச்சிகள் இந்திய மக்களிடத்தில் நல்ல ஆதாரவைப் பெற்று வருவதால், மேலும் இது போன்ற சில நிகழ்ச்சிகள் தழுவப்பட்டு தயாரிக்கப்பட உள்ளன.

அந்த வகையில், தற்போது வெளிநாடுகளில் பிரபலமாகி வரும் ‘சர்வைவர்’ என்ற ரியாலிட்டி நிகழ்ச்சி தயாரிக்கப்பட உள்ளதாம். இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொள்வார்களாம். அவர்கள் அனைவரும் ஒரு தனித் தீவில் தங்க வைக்கப்பட்டு, கடினமா மற்றும் சுவாரஸ்யம் கலந்த டாஸ்க்குகள் அவர்களுக்கு வழங்கப்படுமாம். இவர்கள் அங்கு உயிர்பிழைத்து வாழ்வது மட்டுமின்றி, கொடுக்கப்படும் டாஸ்குகளிலும் சிறப்பாக செயல்பட வேண்டுமாம். அப்படி சிறப்பாக செயல்படுபவருக்கு 100 நாட்கள் தங்கியிருந்த பட்டமும், பரிசும் வழங்கப்படுமாம்.

இந்த வித்தியமான நிகழ்ச்சியை ஜீ நெட்ஒர்க் தயாரிக்க உள்ளதாம். அதோடு பிக்பாஸ் மாதிரியே இதிலும் சினிமா மற்றும் சின்னத்திரை பிரபலங்கள் தான் பங்கேற்க உள்ளார்களாம்.

தமிழில் தயாரிக்கப்பட உள்ள நிகழ்ச்சிக்கான தொகுப்பாளரை நிகழ்ச்சிக் குழு வலை வீசி தேடி வரும் நிலையில், தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான சிம்பு, தனுஷ், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பல நடிகர்களிடம் இதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருவருவதாக கூறப்படுகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil“

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Reality show survivor tamil news survivor reality show to be launched in tamil soon

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com