scorecardresearch

நெட்டிசன்களின் வெறுப்பு மழை… அர்ச்சனா எடுத்த அதிரடி முடிவு!

VJ Archana to quit Twitter அர்ச்சனா டிவிட்டரிலிருந்து விலகவுள்ளதாக ட்வீட் செய்தது தற்போது வைரலாகப் பரவி வருகிறது.

Reason behind VJ Archanas decision to quit social media twitter Netizen trolls Tamil News
Reason behind VJ Archanas decision to quit social media

VJ Archana decides to quit Twitter Tamil News : கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் ரியாலிட்டி நிகழ்ச்சி தற்போது விறுவிறுப்பான இறுதிக் கட்டத்தை நோக்கி பயணித்துக்கொண்டிருக்கிறது. அக்டோபர் 4 -ம் தேதி தொடங்கிய இந்த சீசன் 4 நிகழ்ச்சியில் தற்போது பத்துக்கும் குறைவான போட்டியாளர்களே உள்ளனர். மற்ற சீசன்களைவிட இந்த சீசனில் சுவாரசியம் குறைவாக இருந்தாலும் விமர்சனங்களுக்குப் பஞ்சமில்லாமல் இருக்கிறது.

அர்ச்சனா, சுச்சி என வைல்ட் கார்ட் என்ட்ரியில் சென்ற இருவரும் போன வேகத்திலேயே வெளியேறிவிட்டனர். ஆனால், விமர்சனங்களுக்குக் குறைவில்லாமல் நிகழ்ச்சியை நகர்த்தியவர்கள் இவர்கள்தான். வீட்டில் இருக்கும்போது பல நெகட்டிவ் கமென்ட்டுகளை பெற்று வீட்டைவிட்டு வெளியேறும்போது பாசிட்டிவ் விமர்சனங்களை எதிர்கொண்டார் சுச்சி. ஆனால், வீட்டிலிருந்தபோதும் வெளியேறும்போதும் வெளியேறியபிறகும் பல எதிர்மறை விமர்சனங்களுக்குச் சொந்தக்காரராகியிருக்கிறார் அர்ச்சனா.

கடந்த வாரம் வீட்டை விட்டு வெளியேறிய அர்ச்சனா, ஏராளமான எதிர்மறை விமர்சனங்களை சமூக வலைத்தளங்களில் எதிர்கொண்டு வருகிறார். இதனைத் தொடர்ந்து, தான் டிவிட்டரிலிருந்து விலகவுள்ளதாக ட்வீட் செய்தது தற்போது வைரலாகப் பரவி வருகிறது.

“இந்தக் காதல் – வெறுப்பு சுழற்சியில் நான் சோர்ந்துபோயிருக்கிறேன். உங்கள் ஊகங்களைத் தீர்ப்பதில் சோர்வாக இருக்கிறது. ட்விட்டரிலிருந்து நான் வெளியேறுவதைக் கொண்டாடத் தயாராக உள்ள அனைத்து வெறுப்பாளர்களுக்கு, நான் மீண்டும் வலுவாக முன்னேறுவேன் என்பதைப் பதிவிடுகிறேன்! நீங்கள் அடுத்த பாதிக்கப்பட்டவரை கண்டறியுங்கள்!” என்று தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்து ட்விட்டரிலிருந்து விலகியுள்ளார் அர்ச்சனா.

Reason behind VJ Archanas decision to quit social media twitter Netizen trolls Tamil News
Archana and Zara in Instagram

எப்போதும் பொதுவெளியில் அர்ச்சனாவை கலகலவென பார்த்துப் பழகிய மக்களுக்கு, பிக் பாஸ் வீட்டினுள் மற்றவர்களைப் பற்றிச் சம்பந்தப்பட்ட நபர் இல்லாதபோது தவறாகப் பேசுவது, ஸ்போர்ட்டிவ்வாக இல்லாமல் இருப்பது, ‘அன்பு’தான் ஜெயிக்கும் என்றுகூறிக்கொண்டு ரியோ, சோம், நிஷா, ரமேஷ் என சக போட்டியாளர்களின் தனித்தன்மையையும் கட்டிப்போட்டு தன்னை மட்டுமே முன்னிலைப்படுத்தியது போன்ற அர்ச்சனாவின் செயல்கள் மக்களிடத்தில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதுவே அர்ச்சனாவை மக்கள் எதிர்ப்பதற்குக் காரணம். ஓர் சாதாரண ரியாலிட்டி ஷோ, அதில் பங்குபெறும் நபர்களின் குடும்பத்தாரையும் தாக்குவது முறையற்றது. அர்ச்சனாவின் மகள் ஜாராவும் சமூக வலைத்தளத்தில் ஆக்டிவ். அர்ச்சனாவை வைத்து அவருடைய மகளையும் விமர்சிப்பது அர்ச்சனாவின் மனதைப் பெரிதளவில் பாதிப்படையச் செய்திருக்கிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil”

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Reason behind vj archanas decision to quit social media twitter netizen trolls tamil news