/indian-express-tamil/media/media_files/2025/07/28/kala-master-2025-07-28-17-48-49.jpg)
சினி உலகம் யூடியூப் சேனலில் நடந்த ஒரு நிகழ்ச்சியில், பிரபல டான்ஸ் மாஸ்டர் கலா மாஸ்டரின் 40 வருடப் பயணத்தை கொண்டாடும் வகையில், நடிகர் மற்றும் நகைச்சுவை நடிகர் ரெடின் கிங்ஸ்லீ கலந்து கொண்டு பேசினார். தனது வழக்கமான நகைச்சுவை பாணியில் கலா மாஸ்டரை சில விஷயங்களில் கலாய்த்தாலும், அவருடனான தனது பயணம் மற்றும் மாஸ்டரின் சிறப்பம்சங்களை நெகிழ்ச்சியுடனும் நன்றியுடனும் பகிர்ந்துகொண்டார்.
ரெடின் கிங்ஸ்லீ, கலா மாஸ்டருடன் தான் 25 வருடங்களுக்கும் மேலாகப் பழகி வருவதாகவும், சில வருடங்களுக்கு முன்பு தானும் ஒரு டான்ஸ் மாஸ்டராக இருந்ததாகவும் தெரிவித்தார். இயக்குநர் நெல்சனுக்கு நன்றி தெரிவித்த அவர், மீடியாவுக்கு தான் முதன்முதலில் வந்தது கலா மாஸ்டர் மூலம்தான் என்பதை அழுத்திச் சொன்னார். "மானாட மயிலாட" நிகழ்ச்சியில் கலா மாஸ்டர் தான் தன்னை முதன்முதலில் டி.ஜே. ரவுண்டு செய்ய அழைத்ததாகவும், அதுவே தனது மீடியா வாழ்க்கைக்கு அடித்தளமிட்டதாகவும் கூறினார்.
கலா மாஸ்டர் ஒருமுறை தொலைபேசியில் "எனக்கு 40 வருட கொண்டாட்டம்" என்று சொன்னபோது, கிங்ஸ்லீ "உங்களுக்கு இன்னும் 40 வயதாகவில்லையே, அதற்குள் எதற்கு 40 வருட கொண்டாட்டம்?" என்று கேட்டதாகக் கூறி பார்வையாளர்களைச் சிரிக்க வைத்தார். அதற்கு கலா மாஸ்டர், அது தனது 40 வருடப் பயணம் என்பதைக் குறிப்பிட்டதாகக் கிங்ஸ்லீ தெளிவுபடுத்தினார்.
ரம்பா மேடம்நிகழ்ச்சியில்தமன்னாவருவதற்கு தாமதமானதால், கலா மாஸ்டர், சாண்டி, ஐஷு மற்றும் கிங்ஸ்லீ ஆகியோர் சுமார் 40 நிமிடங்கள் நடனமாடி நிலைமையைக் கட்டுப்படுத்தியதையும், கலா மாஸ்டரின் ஆற்றல் மற்றும் நடன ஆர்வம் இன்றும் அப்படியே இருப்பதாகவும் கிங்ஸ்லீ பாராட்டினார். நடனத்திற்கும் வயதிற்கும் சம்பந்தமில்லை என்று வேடிக்கையாகக் குறிப்பிட்ட அவர், கலா மாஸ்டரின் இந்த முயற்சி அத்தனை அழகிய நினைவுகளைக் கொண்டு வந்ததாகத் தெரிவித்தார்.
மானாட மயிலாடநிகழ்ச்சியில் கேட் ஓபன் செய்யும் அண்ணனில் இருந்து கிங்ஸ்லீயின் கொரியோகிராபர் வரை, கலா மாஸ்டர் பல வருடங்களாக ஒரே குழுவுடன் பணியாற்றி வருவது அவரது தனிச்சிறப்பு என்றும், இது கலா மாஸ்டரால் மட்டுமே முடியும் என்றும் கிங்ஸ்லீ பாராட்டினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.