Advertisment

அப்படி நிர்பந்தம் செய்தால் பெண்கள் செருப்பை கழற்றி அடிப்பார்கள்: ரேகா நாயர்

அட்ஜஸ்ட்மெண்ட் செய்தால்தான் பட வாய்ப்பு என யாரும் சொல்ல முடியாது, அப்படி யாராவது நிர்பந்தம் செய்தால் அவர்களை நம் பெண்கள் செருப்பைக் கழட்டி அடிப்பார்கள் – ரேகா நாயர்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
அப்படி நிர்பந்தம் செய்தால் பெண்கள் செருப்பை கழற்றி அடிப்பார்கள்: ரேகா நாயர்

Rekha Nair open talks about adjustment in cinema industry: திரைத்துறையில் அட்ஜஸ்ட் பண்ணச் சொல்லி நிர்பந்தம் செய்தால் பெண்கள் செருப்பைக் கழற்றி அடிப்பார்கள் என நடிகை ரேகா நாயர் கூறியுள்ளார்.

Advertisment

சன் டிவியின் பூவே உனக்காக வம்சம் உள்ளிட்ட சீரியல்களிலும், விஜய் டிவியின் பகல் நிலவு, நாம் இருவர் நமக்கு இருவர் உள்ளிட்ட சீரியல்களிலும் நடித்துள்ளவர் ரேகா நாயர். இவர் தற்போது பார்த்திபன் இயக்கிய இரவின் நிழல் படத்திலும் நடித்துள்ளார். இரவின் நிழல் படத்தில் ரேகா நாயர் நிர்வாண காட்சியில் நடித்திருந்தார். இந்த காட்சிக்கு பாராட்டும் எதிர்ப்பும் ஒரு சேர எழுந்துள்ளது.

இதையும் படியுங்கள்: ”சென்னையில் கூட வெற்றியை கொண்டாவில்லை..இங்கே கொண்டாடுவதுதான் திருப்தி”: மதுரையில் நடிகர் கார்த்தி

இந்த நிலையில் கலையை கலையாகத்தான் பார்க்க வேணடும் என ரேகா நாயர் கூறியுள்ளார். மேலும், நான் நடித்துள்ள அந்த காட்சி மிகவும் உருக்கமான காட்சி. ஒரு தாயின் மார்பில் ஒரு குழந்தை பால் குடிக்கும் காட்சி, நிர்வாணமாக நடித்ததால் எந்த அளவுக்கு பாராட்டு கிடைக்கிறதோ அதே அளவிற்கு விமர்சனங்களும் வந்துள்ளன. சிலர் பணம் கொடுத்தால் என்ன வேண்டுமானாலும் செய்வீர்களா என கேட்கிறார்கள். அதைப்பற்றி நான் கவலைப்படவில்லை, கலையை ரசிக்க தெரியாதவர்களுக்கு சொல்லி புரியவைக்க முடியாது என்றும் ரேகா நாயர் கூறியுள்ளார்.

இது ஒரு புறம் இருக்க, தனியார் யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்த ரேகா நாயர், அட்ஜஸ்ட்மெண்ட் செய்தால் தான் வாய்ப்பு கிடைக்கிறது என்ற நடிகைகள் சிலரின் குற்றசாட்டுகள் குறித்த கேள்விக்கு, இதுவரை தன்னை யாரும் அட்ஜஸ்ட்மென்ட்டுக்கு அழைக்கவில்லை என்று கூறியுள்ளார்.

மேலும், ’மீ டூ’ என்பதெல்லாம் பொய், ஒருவர் கூப்பிட்டால் விருப்பப்பட்டால் போகலாம் இல்லையென்றால் வர முடியாது என மறுத்து விடலாம். அதைத் தாண்டி இன்று அட்ஜஸ்ட்மெண்ட் செய்தால்தான் பட வாய்ப்பு என யாரும் சொல்ல முடியாது, அப்படி யாராவது நிர்பந்தம் செய்தால் அவர்களை நம் பெண்கள் செருப்பைக் கழட்டி அடிப்பார்கள், எனவே இதுபோன்ற புகார்கள் சற்று அதிகமாகக் கூறப்படுகிறதோ என சந்தேகம் தோன்றுகிறது, என்றும் ரேகா நாயர் கூறியுள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Cinema
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment